தேடுதல்

‘செயற்கை நுண்ணறிவும் அமைதியும்’  2024ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்கான தலைப்பு ‘செயற்கை நுண்ணறிவும் அமைதியும்’ 2024ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்கான தலைப்பு  

2024ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்கான தலைப்பு

புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கும் அதேவேளை, அழிவைத் தரும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஆகியவைகள் குறித்தும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி திருஅவையில் சிறப்பிக்கப்பட உள்ள உலக அமைதி தினத்திற்கான கருப்பொருளை, அதாவது, தலைப்பை வெளியிட்டுள்ளது திருப்பீடம்.

‘செயற்கை நுண்ணறிவும் அமைதியும்’ என்பதே 2024ஆம் ஆண்டு உலக அமைதி தினத்திற்கான தலைப்பு என ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறையால் ஆகஸ்ட் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் துறையில் மனித குலம் கண்டுவரும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, மனித செயல்பாடுகளிலும், தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்விலும், அரசியலிலும், பொருளாதரத்திலும் தன் பாதிப்பை அதிவேகமாக அதிகரித்துவருகிறது எனக் கூறும் திருப்பீடத்துறையின் செய்தி, புதிய தொழில்நுட்பங்களை வரவேற்கும் அதேவேளை, அழிவைத் தரும் பாதிப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஆகியவைகள் குறித்தும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும் என்ற திருத்தந்தையின் அழைப்பையும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது.

மோதலுக்கு வழிவகுக்கும் அநீதிகளும் சரிநிகரற்றத் தன்மைகளும் உருவாவதற்கு புதிய கண்டுபிடிப்புகள் காரணமாக அமையக்கூடாது எனவும், மனிதகுலத்திற்கு சேவையாற்றுவதாக, நம் பொதுஇல்லமாகிய இவ்வுலகை காப்பாற்றுவதாக, ஒழுக்கரீதி மனநிலையைக் கொண்டதாக, எந்த ஓர் அறிவியல் புதிய கண்டுபிடிப்பும் இருக்க வேண்டும் எனவும் ஒருங்கிணைந்த மனிதகுல வளர்ச்சிக்கான திருப்பீடத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 August 2023, 13:50