தேடுதல்

திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

நல்லிணக்கத்திற்கு உதவிய கர்தினால் பரோலின் தென்சூடான் பயணம்

உரையாடல், அர்ப்பணிப்பு, அனைவருக்கும் என்ற மூன்று வார்த்தைக்களை அடிப்படையாகக் கொண்டு தென் சூடான் மக்களுக்கு கர்தினால் பியத்ரோ பரோலின் கருத்துக்களை வழங்கினார்.

மெரினா ராஜ் – வத்திக்கான்

திருப்பீடச்செயலர் பரோலின் அவர்களது இருப்பு, தொடர்ந்து ஒன்றிணைந்து நடக்க ஓர் ஊக்கமாக இருந்தது என்றும், மக்களுக்கும் முழு திருஅவைக்கும் இடையே ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளர்த்து பிளவுகளைக் களைய வழிவகுத்தது என்றும் கூறினார் ஆயர் கிறிஸ்டியன் கர்லாஸ்சரே.

ஆகஸ்ட் 17 வியாழன் அன்று தனது தென்சூடான் பயணத்தை நிறைவு செய்து அம்மக்களுடன் சிறப்பு திருப்பலி  நிறைவேற்றிய திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் பயணம் மற்றும் உரை பற்றி வத்திக்கான் செய்திகளுடன் இவ்வாறு பகிர்ந்துள்ளார் ரம்பெக் ஆயர் Christian Carlassare.  

உரையாடல், அர்ப்பணிப்பு, அனைவருக்கும் என்ற மூன்று வார்த்தைக்களை அடிப்படையாகக் கொண்டு தென் சூடான் மக்களுக்கு கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்கள் வழங்கிய கருத்துக்கள் தென்சூடான் மக்கள் வறுமையில் இருந்து மீண்டு மறுபிறவி எடுக்கத் தூண்டியுள்ளது என்று கூறியுள்ளார் ஆயர்  Christian Carlassare.

அச்சம் வேரூன்றிய பல ஆண்டு மோதல்கள் மற்றும் பல வன்முறைகளால் பாதிக்கப்பட்ட தென் சூடான் நாட்டில் தேசிய உரையாடல் என்பது அனைத்து கட்சிகளும் ஒன்றுபட்டு,  அநீதிகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிரான செயல்களை மாற்றுவதற்கு  உதவுகின்றது என்றும்,

அனைவரின் கூட்டுப் பங்கேற்பு மற்றும் அர்ப்பணிப்புடன் செய்யப்படும் செயல்கள், முக்கியமானவை என்றும்,

அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் மட்டுமே அனைவருக்கும் வெற்றி கிடைக்கும் என்றும் எடுத்துரைத்தார்  ஆயர் கர்லாஸரே.

மக்கள் மாண்போடு வாழவும் எல்லாவிதமான உதவிகளைப் பெறவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவர்களுக்குத் தேவையான முதன்மைப் பொருட்களான கல்வி, நலவாழ்வு, ஆகியவற்றை உறுதி செய்யும் ஒரு சமூக உடன்படிக்கைக்காக ஒன்றிணைந்து பணியாற்ற கர்தினால் பரோலின் வருகை வலியுறுத்தியது என்றும் கூறினார்.

வறுமை,  துயரம், போன்றவற்றில் இருந்து மீண்டு, எதிர்கால நம்பிக்கையை அளிக்க செயல்முறைகளை இயக்கத் தொடங்க வேண்டும் என்று கூறிய ஆயர் கர்லாஸ்சரே அவர்கள், இதனால் அனைவரும் விரும்பும் அமைதியுடன் வாழ முடியும் என்றும்  அதற்கு துணிவுடன் கூடிய முயற்சிகள் தேவை என்றும் வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 August 2023, 12:43