தேடுதல்

பாத்திமா நகரில் திருத்தந்தை(கோப்பு படம்) பாத்திமா நகரில் திருத்தந்தை(கோப்பு படம்) 

கடவுளின் குழந்தைகள் அன்னையின் குரலுக்கு செவிமடுக்கவேண்டும்

உலக இளையோர் தினத்தில் பங்குகொள்ளச் செல்லும் இளையோர், இயேசுவுக்குத் தங்களைத் திறந்தவர்களாக, மகிழ்ச்சிப் பாதையில் இணைந்து நடைபோட முன்வர வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உலக இளையோர் தினக்கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர்த்துக்கல்லின் லிஸ்பனில் இருந்து ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பாத்திமா நகர் சென்று இளையோருடன் இணைந்து செபமாலையை செபிக்க உள்ளது, மரியன்னையோடு இணைந்து இயேசுவுடன் திருப்பயணம் மேற்கொள்வதாக இருக்கும் என தெரிவித்தார் கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி.

வத்திக்கான் பெருங்கோவிலின் முன்னாள் தலைமைக்குருவான கர்தினால் கொமாஸ்திரி அவர்கள் Telepace தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்முகத்தில், பாத்திமா மரியன்னை திருத்தலத்திற்கு திருத்தந்தை மேற்கொள்ளும் திருப்பயணத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து எடுத்துரைத்தார்.

கடவுளின் குழந்தைகளாகச் செயல்பட விரும்பும் ஒவ்வொருவரும் அன்னைமரியாவின் குரலுக்கு செவிமடுக்கவேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறிய கர்தினால் கொமாஸ்திரி அவர்கள், அன்னை மரியாவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது எண்ணற்றவை உள்ளன எனவும் தெரிவித்தார்.

உலக இளையோர் தினத்தில் பங்குகொள்ளச் செல்லும் இளையோர் அனைவரும் இயேசுவுக்குத் தங்களைத் திறந்தவர்களாக, அவருடன் மகிழ்ச்சிப் பாதையில் இணைந்து நடைபோட முன்வரவேண்டும் எனற விண்ணப்பதையும் முன்வைத்தார் கர்தினால்.

நற்செய்தியை வாழ்வாக்குவதன் வழியாகவே வாழ்வு மேன்மையடைகிறது என்ற புனித அன்னை திரேசாவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டிய கர்தினால் கொமாஸ்திரி அவர்கள், நம் இதயங்களை எப்போதும் திறந்து வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 July 2023, 14:11