தேடுதல்

‘‘செயற்கை நுண்ணறிவு மாநாடு  ‘‘செயற்கை நுண்ணறிவு மாநாடு   (REUTERS)

கலாச்சாரத்திறன் கொண்டவர்களை உருவாக்கும் பல்கலைக்கழகம்

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தும் அபாயங்களிலிருந்து பின்வாங்காமல், அதன் நெறிமுறை வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும். - கர்தினால் Tolentino

மெரினா ராஜ் - வத்திக்கான்

கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் தனக்காக வாழவில்லை என்பதை நினைவுபடுத்த வேண்டும் என்றும், கேட்கும் திறன், கூட்டுப் பொறுப்புணர்வோடு பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் திறன் மற்றும் கலாச்சாரங்களை உருவாக்கக்கூடிய திறன் கொண்டவர்களை உருவாக்குகின்றன என்றும் கூறினார் கர்தினால் José Tolentino.

ஜூலை 13 வியாழன் அன்று மிலானில் நடைபெற்ற முன்னணி கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் பன்னாட்டு வலையமைப்பு மற்றும் கத்தோலிக்க ஆராய்ச்சி பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘‘செயற்கை நுண்ணறிவு காலத்தில் கத்தோலிக்க பல்கலைக்கழகங்களின் எதிர்காலம்" என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டின் தொடக்கத்தில் இவ்வாறு கூறினார் கலாச்சாரம் மற்றும் கல்விக்கான திருப்பீடத்துறையின் தலைவர் கர்தினால் José Tolentino Calaça de Mendonça.

பல்கலைக்கழக உலகில் வசிப்பவர்கள் நம்பிக்கை இல்லாமல் இருக்க முடியாது. நம்பிக்கையே அவர்கள் பணி என்று எடுத்துரைத்த கர்தினால் Tolentino அவர்கள், இது மேலோட்டமான நம்பிக்கையல்ல, மாறாக ஆழமான நம்பிக்கை என்றும், சரியான வழியில் ஏற்படுகின்ற ஆபத்தையும் அறியும் நம்பிக்கை என்றும் எடுத்துரைத்தார்.

கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவின் அச்சுறுத்தும் அபாயங்களிலிருந்து பின்வாங்காமல், அதன் நெறிமுறை வளர்ச்சியில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்றும், இன்னும் அதிகமாக, கலாச்சார, அறிவியல் மற்றும் சமூக சாத்தியக்கூறுகளின் பாதைகளைக் கடந்து செல்லும் நிலையில்  திருஅவைப் பணியைப் பகிர்ந்து ஆற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார் கர்தினால் Tolentino.

புதியவற்றுடன் உரையாடுதல், தற்போதைய கேள்விகள் மற்றும் சிக்கல்களில் துணிவுடன்  செயல்படுதல், எதிர்காலத்தின் சிறந்த ஆய்வகங்களாக தங்களை நிலைநிறுத்திக் கொள்ளுதல் போன்றவற்றில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகங்கள் கவனமுடன் செயல்படவேண்டும் என்றும், எதிர்கால ஆய்வுகளாகவும் அதனை உருவாக்கும் வளர்ச்சிப் பாதைகளாகவும் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார் கர்தினால் Tolentino.

மனித குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் உருவாக்கத்தில் முதலீடு செய்வதன் வழியாக தங்கள் அறிவாற்றல், படைப்பு, ஆன்மிகம் மற்றும் நெறிமுறை திறனை ஒரு தகுதியான வழியில், பொது நலனுக்காக வளர்த்துக் கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்தார் கர்தினால் டொலந்தினோ.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 July 2023, 13:57