தேடுதல்

வியட்நாம் அரசுத்தலைவருடன் கர்தினால் பரோலின் வியட்நாம் அரசுத்தலைவருடன் கர்தினால் பரோலின்  (ANSA)

வியட்நாம் நாட்டிலிருந்துப் பணியாற்ற உள்ள திருப்பீடப் பிரதிநிதி

நீதி மற்றும் அமைதியின் வழியில் பேசுசுவார்த்தைகளின் பாதையைத் திறக்க வேண்டும் என்பது திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் விருப்பமாக இருந்தது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

வியட்நாம் நாட்டில் தங்கியிருந்துப் பணியாற்றும் திருப்பீடப் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படுவது குறித்த ஒப்பந்தம் இவ்வாரத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது, இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் மதிப்பது, மற்றும் ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கைக் கொள்வது என்பதன் அடையாளமாக உள்ளது என தெரிவித்தார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

வத்திக்கான் மற்றும் வியட்நாமிற்கு இடையேயான அரசியல் உறவில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் முன்னேற்றங்கள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு பேட்டியளித்த கர்தினால் பரோலின் அவர்கள், 1989ஆம் ஆண்டு வியட்நாம் நாட்டிற்கு அப்போதைய திருப்பீட நீதி மற்றும் அமைதி அவைத் தலைவர் கர்தினால் ரோஜர் எச்சகராய் அவர்கள் பயணம் செய்ய இயன்றதும், அதன்பின் ஒவ்வோர் ஆண்டும் திருப்பீட அதிகாரிகள்  அரசு அதிகாரிகளையும், மறைமாவட்ட சமூகங்களையும் சந்திக்க சென்று வந்தது குறித்தும் எடுத்துரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், நீதி மற்றும் அமைதியின் வழியில் பேசுசுவார்த்தைகளின் பாதையைத் திறக்க வேண்டும் என்ற திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் விருப்பத்தின் பேரில் இந்த சந்திப்புக்கள் இடம்பெற்றுவந்தன என உரைத்தார்.

இந்த சந்திப்புக்களின் தொடர்ச்சியாக 2009ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வியட்நாம் அரசுத் தலைவர் Nguyen Minh Triet அவர்கள், திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

படிப்படியாக வியட்நாம் அரசுக்கும் வத்திக்கான் நாட்டிற்கும் இடையே உறவில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் தேதி முதல் வியட்நாமிற்கான திருப்பீடப் பிரதிநிதி பேராயர் Leopoldo Girelli சிங்கப்பூரிலிருந்து செயல்படத் துவங்கினார்.

இவ்வாரம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி வியட்நாம் நாட்டில் திருப்பீடப் பிரதிநிதி தன் உறைவிடத்தைக் கொண்டிருப்பார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 July 2023, 15:00