தேடுதல்

திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி மற்றும் மெனிகெத்தி திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி மற்றும் மெனிகெத்தி  

இணைப்புப் பாலங்களாக செயல்படும் ஊடகங்கள் தேவை

போர், மோதல், வறுமை போன்ற வாழ்வின் எதாரர்த்தங்களைப் பற்றிய செய்திகளிலும் மக்களுக்கு மிகவும் தேவையான நம்பிக்கையின் விதைகளை அளிக்க முயற்சி செய்கிறோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

பிரிக்கின்ற சுவர்களை அல்ல இணைக்கின்ற பாலங்களை, தடைகளை அல்ல உரையாடலை உருவாக்கும் ஊடகங்களின் தேவை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.

ஜூன் 1 வியாழன்  போலந்து நாட்டின் லப்ளின் இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய போது இவ்வாறு கூறியுள்ளனர் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி மற்றும் வத்திக்கான் செய்தித்துறையின் ஆசிரியர் குழுமத்தில் ஒருவரான Massimiliano Menichetti.

இதழியல் துறை மாணவர்களுடனான இச்சந்திப்பில், தலத்திருஅவையில் தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதலில் கவனம் செலுத்துதல் ஆகியவை பற்றியும் மக்களின் வாழ்க்கை, உண்மை மற்றும் சாட்சியத்தின் அடிப்படையில் ஊடகங்களின் முக்கியத்துவம் பற்றியும் வலியுறுத்தியுள்ளனர்.

வத்திக்கான் செய்தித்தொடர்பு பணி பற்றிக் கூறுகையில் போர், மோதல், வறுமை போன்ற வாழ்வின் எதாரர்த்தங்களைப் பற்றிய செய்திகளிலும் மக்களுக்கு மிகவும் தேவையான நம்பிக்கையின் விதைகளை அளிக்க முயற்சி செய்கிறோம் என்றும் ஏனென்றால் அதுதான் அனைவருக்கும் தேவை என்றும் தொர்னியெல்லி கூறியுள்ளார்.

உக்ரைனில் வெடிகுண்டு வெடித்தால், அழிவைப் பற்றி தெரிவிக்கும்  அதே நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் உதவுகிறார்கள், மற்றவர்களின் நலன், அமைதி, உடன்பிறந்த உறவிற்காக உதவுபவர்களையும் எடுத்துரைப்பதாகவும் கூறியுள்ளார் மெனிகெத்தி.

ஊடகங்களில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய தொரினியெல்லி, மெனிகெத்தி இருவரும், நல்லதைத் தொடர்புகொள்ளவும், பரிமாற்றங்களை வளர்க்கவும், பிறர் சொல்வதைக் கேட்கவும், கிறிஸ்தவ நம்பிக்கையின் அழகுக்கு சாட்சியாக இருக்கவும், உண்மை அடையாளத்தை மாற்றாத அனைத்து நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தும் ஊடகங்கள் நமக்குத் தேவை, என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

லப்ளின் இரண்டாம் ஜான் பால் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் உலகின் மிகப்பெரிய கத்தோலிக்க பல்கலைக்கழகங்களில் ஒன்றாகவும் கத்தோலிக்க சிந்தனையின் முக்கிய மையமாகவும் திகழ்கின்றது. அறிவியல் செயல்பாடுகள், இளைஞர்களுக்கு இறையியல், தத்துவம், சமூக அறிவியல், சட்டம், மனிதநேயம், கணிதம், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில் கல்விப் பயிற்சி அளித்து வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2023, 10:51