Peter’s Pence என்ற அமைப்பின் ஆண்டு வரவு செலவு அறிவிப்பு
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
திருத்தந்தைக்கு உலகெங்கிலும் விசுவாசிகள் வழங்கிய நிதியுதவியின் மொத்த தொகை 107 மில்லியன் யூரோக்கள் என்றும் இதில் 95.5 மில்லியன் யூரோக்கள் செலவு செய்யப்பட்டுள்ளன என்றும் 2022-ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது Peter’s Pence என்ற அமைப்பு
உலகெங்கிலும் உள்ள கத்தோலிக்க விசுவாசிகள் இவ்வமைப்புக் வழங்கிய நன்கொடைகள், புனிதர்களான பேதுரு, பவுல் பெருவிழாவில் பெறப்பட்ட உதவிகள் அத்துடன் ஆண்டு முழுவதும் நன்கொடைகள் மற்றும் முதலீடுகள் வழியாகப் பெறப்பட்ட மொத்த தொகைகள் இவை என்றும் அவ்வமைப்புக் கூறியுள்ளது.
2022-ஆம் ஆண்டில் Peter’s Pence வழங்கிய மொத்த தொகை 93.8 மில்லியன் யூரோக்கள் என்றும், இந்த நன்கொடைகள் யாவும் திருப்பீடத்தின் பல்வேறு துறைகள், நிறுவனங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளை ஆதரிப்பது மற்றும் தேவையில் உள்ளோருக்கு உதவுதல் என இரண்டு முக்கிய நோக்கங்களுக்காக செலவிடப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Peter’s Pence அமைப்பால் அளிக்கப்பட்ட இந்த நிதிகள் யாவும் சமூகத் திட்டங்கள், தேவையில் இருக்கும் திருஅவைகளின் நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு ஆதரவு மற்றும், புதிய தலத்திருஅவைகளில் நற்செய்திப் பணியை விரிவுபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல் எனப் பல்வேறு நிலைகளில் செலவிடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்