தேடுதல்

பேராயர்  கபிரியேலே காச்சா. பேராயர் கபிரியேலே காச்சா. 

உண்மையான உரையாடலில் மனித உடன்பிறந்த உறவின் முன்னேற்றம்

மதங்களுக்கிடையேயான உரையாடல் பரஸ்பர புரிதலை ஊக்குவித்து நமது பொதுவான மதிப்புகளைக் கண்டறிய வழிவகுக்கின்றது – பேராயர் கபிரியேலே காச்சா

மெரினா ராஜ் – வத்திக்கான்

உண்மையான உரையாடலுடன் மனித உடன்பிறந்த உறவில் முன்னேற்றத்தை ஏற்படுத்த திருப்பீடம் தொடர்ந்து ஆதரவு அளிக்கின்றது என்றும் பல்சமய மற்றும் பன்முக கலாச்சாரத்திற்காக உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார் பேராயர் கபிரியேலே காச்சா.

ஜூன் 14 புதன் கிழமை நியூயார்க்கில் நடைபெற்ற "கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே உறவின் பாலங்களைக் கட்டுவதற்கான கூட்டத்தின்போது இவ்வாறு கூறியுள்ளார் ஐ.நா.வில் திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளராகப் பணியாற்றும் பேராயர்  கபிரியேலே காச்சா.

நமது எதிர்காலத்திற்கு அவசியமான பல்சமய மற்றும் பன்முகக் கலாச்சார உரையாடலின்" முக்கியத்துவத்தை திருப்பீடம் எடுத்துரைக்கின்றது என்று கூறிய பேராயர் காச்சா அவர்கள், அமைதி மற்றும் ஒற்றுமையை வளர்ப்பதற்கு பாலங்கள் கட்டுவது ஒரு கட்டாயப் பொறுப்பாக மாறியுள்ளது என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு மதத்தினரிடையே உள்ள நேர்மறையான உறவையும், கருணையின் நற்பண்பில் தொகுக்கப்பட்ட உண்மையான உரையாடலையும் இக்கூட்டமானது அடையாளம் காட்டுகின்றது என்று குறிப்பிட்ட பேராயர் காச்சா அவர்கள், "மதங்களுக்கிடையேயான உரையாடல் பரஸ்பர புரிதலை ஊக்குவித்து நமது பொதுவான மதிப்புகளைக் கண்டறிய வழிவகுக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

மேலும் உண்மையான உரையாடல், வேரூன்றிய மனித உடன்பிறந்த உறவுடன் கூடிய சமுதாயத்தை நோக்கியப் பாதையில் முன்னேற உதவுகின்றது என்றும் அக்கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார் பேராயர் காச்சா.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 June 2023, 13:09