தேடுதல்

திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் திருப்பீடத்தின் பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர்   (AFP or licensors)

அமைதிக்கான செயல்பாடுகள் உயிரோட்டமுடையதாக...

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அதாவது உக்ரைன் - இரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அமைதியான முறையில் தீர்வு காண உழைத்து வருகிறார் – பேராயர் காலகர்

மெரினா ராஜ் – வத்திக்கான்

கத்தோலிக்க கிறிஸ்தவ சமூகங்களின் நலவாழ்வு, அவர்களின் சுதந்திரம் மற்றும் வாழ்க்கையே திருப்பீடத்தின் முதன்மையான அக்கறை என்றும் அமைதிக்கான செயல்திட்டங்கள் பற்றிய முன்னெடுப்புக்களை உயிரோட்டமுடையதாக வைத்துக் கொள்ள திருஅவை தொடர்ந்து செயல்படுகின்றது என்றும் கூறியுள்ளார் பேராயர் காலகர்.

இத்தாலிய செய்தித்தாளான "லா ஸ்டாம்பா" க்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு கூறியுள்ள பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், உக்ரைனில் அமைதிக்கான  திருப்பீடத்தின் முயற்சிகள், மக்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே நல்லுறவை வளர்ப்பதற்கான அதன் நோக்கம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.

உக்ரைன் போரானது பேச்சுவார்த்தையினால் தான் முடிவடையும், என்று கூறியுள்ள பேராயர் காலகர் அவர்கள் பேச்சுவார்த்தை  விரைவில் நடைபெற அதன் முயற்சிக்கு திருஅவை உதவி வருகின்றது என்றும், உக்ரேனிய மக்களின் துன்பங்களை திருப்பீடம் அங்கீகரிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.

அமைதிக்கான முயற்சிகள் பற்றிய யோசனையை நாம் உயிருடன் வைத்திருக்க வேண்டும்," என்றும் வலியுறுத்தியுள்ள பேராயர் காலகர் அவர்கள், 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அதாவது உக்ரைன் - இரஷ்யா  போர் தொடங்கியதில் இருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அமைதியான முறையில் தீர்வு காண உழைத்து வருவதாகவும், உக்ரைன் போர் பதற்றத்தைத் தணிக்கவும், அதற்கான பாதைகளைத் தொடங்கவும் ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் திருத்தந்தை தொடர்ந்து மதிப்பிட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

உக்ரைன் மற்றும் இரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கும் இத்தாலிய  கர்தினால் மத்தேயோ சூப்பியின் பணிகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போர்ச்சூழலின் வேகத்தை அறிந்து மிகவும் முக்கியமான கால நேரத்துடன் பணிகள் சிறப்பாக நடைபெற தொடர்ந்து செபிப்பதாகவும் கூறியுள்ளார் பேராயர் காலகர்.

மோதலில் மற்ற நாடுகளின் பங்கு, சீனா மற்றும் ஈரானுடனான இரஷ்யாவின் உறவுகள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்துள்ள பேராயர் காலகர், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு நாடும் நாட்டுத்தலைவர்களும் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதே திருஅவையின் நிலைப்பாடு மற்றும் கருத்து என்று எடுத்துரைத்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 June 2023, 10:43