தேடுதல்

கர்தினால் Matteo Zuppi மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும்தந்தை கிரில் கர்தினால் Matteo Zuppi மற்றும் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும்தந்தை கிரில்   (ANSA)

முதுபெரும்தந்தை கிரில் மற்றும் கர்தினால் Matteo Zuppi சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உங்களை சிறப்புத் தூதராக எங்கள் நாட்டிற்கு அனுப்பிவைத்ததற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம் : முதுபெரும்தந்தை கிரில்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருத்தந்தையின் தூதராக மாஸ்கோ சென்றுள்ள கர்தினால் Matteo Zuppi அவர்களைச் சந்தித்த இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபையின் முதுபெரும்தந்தை கிரில் அவர்கள், அமைதியை ஏற்படுத்துவதில் திருப்பீடத்தின்  முன்முயற்சிகளுக்கும் உழைப்பிற்கும் மீண்டும் பாராட்டுத் தெரிவித்தார்.

ஜூன் 29, இவ்வியாழனன்று பிற்பகல் முதுபெரும்தந்தை கிரில் அவர்கள் இல்லத்தில் நிகழ்ந்த இவ்விவிருவருக்குமான சந்திப்பின்போது, அமைதி மற்றும் நீதிக்காகப்  பணியாற்றுவது, தலத் திருஅவைகளின் பொதுவானப் பணிகள், போரின் காரணமாக உக்ரைனில் நிலவிவரும் போரின் பதட்டங்களைத் தணிப்பது உள்ளிட்டவைகள் குறித்துக் கலந்துரையாடினர்.

மேலும் ஒரு பெரிய ஆயுத மோதலைத் தடுக்கும் விதமாக உலகின் அனைத்து வலிமைவாய்ந்த  அமைப்புகளை ஒன்றிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்தும் அவர்கள் விவாதித்தனர் என்றும், இந்தச் சந்திப்பின்போது முதுபெரும் தந்தை கிரில் அவர்களின் ஒத்துழைப்பாளர்களும், இரஷ்ய நாட்டிற்கான திருப்பீடத் தூதர் Giovanni D'Aniello அவர்களும் உடனிருந்தனர்.

எனக்குத் தெரிந்த சகோதரர்களுடன் தாங்கள் இங்கு வந்ததில் எனக்கு நிறைந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தங்களை அவரின் சிறப்புத் தூதராக எங்கள் நாட்டிற்கு அனுப்பிவைத்ததற்காக நாங்கள் அவரைப் பாராட்டுகிறோம் என்றும் தெரிவித்தார் முதுபெரும்தந்தை கிரில்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 June 2023, 15:50