தேடுதல்

கர்தினால் Matteo Zuppi. கர்தினால் Matteo Zuppi. 

திருத்தந்தையின் பிரதிநிதியாக உக்ரைனில் கர்தினால் Zuppi

உக்ரைனில் நீதியான அமைதியைப் பெறுவதற்கான வழிகள் குறித்து அந்நாட்டு உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார் கர்தினால் Zuppi.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

உக்ரைனில் நீதியான அமைதியைப் பெறுவதற்கான வழிகள் குறித்து அந்நாட்டு உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகிறார் கர்தினால் Matteo Zuppi.

திருத்தந்தையின் பிரதிநிதியாக ஜூன் மாதம் 5 மற்றும் 6 தேதிகளில் அமைதிப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள கர்தினால் Zuppi அவர்கள், இரு நாட்களையும் Kyiv நகரில் அரசியல் தலைவர்களைச் சந்திப்பதில் செலவிட்டுள்ளார்.

இத்தாலிய ஆயர்பேரவைத் தலைவரும், Bologna நகர் பேராயருமான கர்தினால் Zuppi அவர்கள், பதட்டநிலைகளைக் குறைத்து நீதியான அமைதியைப் பெறுவதற்கு உதவும் நோக்கத்தில் உக்ரைனின் அனைத்துமட்டத் தலைவர்களுக்கும் ஆழமாகச் செவிமடுக்க திருத்தந்தையால் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இச்சந்திப்பு குறித்து ஏற்கனவே தன் கருத்துக்களை வெளியிட்டுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இது ஓர் அமைதி உடன்படிக்கைக்கான பயணம் அல்ல, மாறாக, அமைதிச் சூழலை உருவாக்குவதற்கான பயணம் என கூறியுள்ளார்.

அமைதிக்கான முயற்சியில் அனைவரையும் ஒன்றிணைத்துக் கொண்டுவரவேண்டும் என்பதே, திருப்பீடத்தின் நோக்கமாக உள்ளது எனவும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2023, 14:23