'கிறிஸ்துவின் மறையுடல்' என்ற திருத்தூது மடலுக்கு வயது 80
செல்வராஜ் சூசைமாணிக்கம்
திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்கள் எழுதிய கிறிஸ்துவின் மறையுடல் என்ற திருமடலில், புனிதத்திற்கான பாதையை நினைவுபடுத்துவது மட்டுமல்லாமல், இறையாட்சியின் விரிவாக்கத்திற்கு, அதாவது, பணிக்கான அடிப்படை பங்களிப்பையும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார் முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி
கத்தோலிக்கத் திருஅவையை கிறிஸ்துவின் மறையுடல் என்று விவரிக்கும் திருத்தந்தை 12- ஆம் பயஸ் அவர்கள் எழுதிய "Mystici Corporis" என்ற திருத்தூது மடலின் 80வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இவ்வாறு உரைத்துள்ளார் திருப்பீடத் தகவல்தொடர்பு அவையின் செய்திப் பிரிவு இயக்குனர், முனைவர் அந்த்ரேயா தொர்னியெல்லி.
இன்றைய நம் காலத்தில், குடும்பங்களின் தந்தையர்கள் மற்றும் அன்னையர்கள், திருமுழுக்கின் வழியாக ஞானப் பெற்றோராக இருப்பவர்கள், குறிப்பாக இறையாட்சியை அறிவிப்பதில் திருஅவையுடன் ஒத்துழைக்கும் பொதுநிலையினர், மரியாதைக்குரியவர்கள், பெரும்பாலும் தாழ்நிலையில் உள்ளவர்கள் யாவரும் கிறிஸ்தவச் சமூகத்தில் இடம் பெறவும், கடவுளின் அருட்கர உதவியுடன் அவர்கள் மிக உயர்ந்த தெய்வீகத்தின் உச்சத்தை அடைய முடியும் என்று, இம்மடலில் திருத்தந்தை 12-ஆம் பயஸ் அவர்கள் எடுத்துக்காட்டியுள்ளதாகக் கூறியுள்ளார் தொர்னியெல்லி.
நமது நாட்களில், அதாவது, 1943 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் பேரழிவு பயங்கரத்தால் குறிக்கப்பட்ட தூய பேதுருவின் வாரிசுகளான குடும்பங்களின் தந்தையர்கள் மற்றும் அன்னையர்கள் ஆக்கிரமித்துள்ள அல்லது ஆக்கிரமிக்க வேண்டிய மாண்புக்குரிய இடத்தையும் அத்திருமடலில் திருத்தந்தை 12-ஆம் பயஸ் எடுத்துக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் தொர்னியெல்லி.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்