தேடுதல்

வத்திக்கான் வங்கி என அறியப்படும் IOR வத்திக்கான் வங்கி என அறியப்படும் IOR  (© Vatican Media)

வத்திக்கான் வங்கியின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கை

IOR எனப்படும் சமயப் பணிகளுக்கான அமைப்பு 1942ஆம் ஆண்டு திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால் உருவாக்கப்பட்டு, 1990ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்களால் அதன் விதிமுறைகளுக்கான ஒப்புதல் பெற்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

IOR எனப்படும் வத்திக்கானின் சமயப் பணிகளுக்கான அமைப்பானது வட்டி மற்றும் வருவாய் விகிதங்களினால் மட்டுமன்று செலவீனக் கட்டுப்பாடுகளாலும் வாடிக்கையாளர் மேம்பாட்டு முதலீடுகளாலும் அதிக இலாபத்தை அடைந்துள்ளதாக அதன் வருடாந்திர அறிக்கை தெரிவிக்கின்றது.

ஜூன் 6 செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட 2022ஆம் ஆண்டிற்கான வத்திக்கான் வங்கி என அறியப்படும் IORஇன் வருடாந்திர அறிக்கையானது அனைத்துலக தணிக்கை நிதி அமைப்புக்களோடு இணைந்து 11ஆவது ஆண்டாக தன்னுடைய ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

வத்திக்கான் வங்கியின் நிதியானது Mazars Italia என்னும் நிதி தணிக்கையாளர் அமைப்பால் ஏப்ரல் 25 அன்று ஏற்கப்பட்டு, வத்திக்கான் வங்கியின் தலைமை அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று ஆய்விற்காக கர்தினால்கள் அவைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான இலாபம் 2,96,00,000 யூரோக்கள் என்றும், வட்டி 3.7 விழுக்காடு, என்றும் அவ்வறிக்கைத் தெரிவித்துள்ளது.

2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கைகளின் சரியான தன்மை மற்றும் வத்திக்கான் வங்கியின் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, கர்தினால்கள் அவை இலாபங்களைப் பகிர முடிவு செய்த நிலையில் வத்திக்கான் வங்கியானது திருத்தந்தை மற்றும் சமயப் பணிகளுக்கான தனது முதன்மையான பணியினைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்றும், அவ்வறிக்கைத் தெளிவுபடுத்துகின்றது.

உலகம் முழுவதும் உள்ள தலத்திரு அவைகளுக்காகப் பணியாற்றும் வகையில் தனது வங்கிப் பணியில் முதலீட்டுச் சேவைகள், தகவல் தொழில்நுட்பத் தளங்களை மேலும் மேம்படுத்துதல், அனுபவமிக்க நிபுணர்களை நிர்வாகப் பணிகளில் அமர்த்துதல், தலைமுறை வருவாயை ஊக்குவித்தல், வெளிப்படையான மற்றும் கட்டமைக்கப்பட்ட ஊதியத்தை அறிமுகப்படுத்துதல் போன்றவற்றை விரிவுபடுத்தியுள்ளது.

வட்டி விகிதம், வருவாய் விகிதம் ஆகியவற்றின் நேர்மறையான பங்களிப்பு மட்டுமன்றி செலவீனங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முதலீடுகளாலும் இவ்வாண்டு இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அவ்வறிக்கை தெரிவிக்கின்றது.

2014 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் தற்போது IOR Moneyval மதிப்பீடு அனைத்துலக நிதிதர வரிசை நிறுவனங்களுள் ஒன்றாகவும் 45 வெவ்வேறு நிதிப்பிரிவுகளைக் கொண்டும் செயல்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 June 2023, 14:26