தேடுதல்

 Ivory Coas-இல் தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் Ivory Coas-இல் தக்காளி விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்   (ANSA)

உணவு பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்புக் குறித்த கருத்தரங்கு

உலக அளவில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுள் 25 விழுக்காட்டினர் பெண்கள், இது வளரும் நாடுகளில் 43 விழுக்காடுவரை இருக்கிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் நிறுவனத்திற்கான திருப்பீடப் பிரதிநிதி அலுவலகத்துடன் உரோம் நகரின் இயேசு சபை கிரகோரியன் பல்கலைக்கழகமும் இணைந்து உணவு பாதுகாப்பில் பெண்களின் பங்களிப்புக் குறித்த ஒரு நாள் கருத்தரங்கை நடத்தின.

மே 22, திங்கள்கிழமையன்று இடம்பெற்ற இக்கருத்தரங்கில், உலகில் பசியை அகற்றுவதில் பெண்கள் ஆற்றிவரும் பங்களிப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது.

வளர்ச்சிப் பாதையில் பெண்களின் பங்களிப்புக் குறித்து விவாதித்த இக்கருத்தரங்கில், மாற்றத்தின் உண்மை கருவிகளாகவும், இன்றைய உணவு நிலைகளை மாற்றவல்லவர்களாகவும், சுற்றுச்சூழலை பாதுகாப்பவர்களாகவும் பெண்களால் சிறப்புப் பங்காற்ற முடியும் என்பது வலியுறுத்தப்பட்டது.

உலக அளவில் விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுள் 25 விழுக்காட்டினர் பெண்கள் எனவும், இது வளரும் நாடுகளில் 43 விழுக்காடுவரை இருப்பதாகவும் ஐ.நா. புள்ளிவிவரங்களை இந்த கருத்தரங்கு சுட்டிக்காட்டியது.

ஆண்களைப்போல் பெண்களும் விவசாயத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றபோதிலும், அவர்கள் ஆணுக்கு இணையாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை, மற்றும் அவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டிய இக்கருத்தரங்கு, பெண்களின் பங்களிப்பையும் ஏற்றுக்கொள்வதன் வழியாகவே உணவுப்பாதுகாப்பை உலகில் உறுதிச்செய்ய முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 May 2023, 12:56