முடிசூட்டு விழாவில் பங்கேற்கிறார் கர்தினால் பியெத்ரோ பரோலின்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இம்மேமாதம் 6-ஆம் தேதி, சனிக்கிழமையன்று, இங்கிலாந்தின் வெஸ்ட்மினிஸ்ட்டரில் நடைபெறும் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாகத் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் பங்கேற்கிறார் என்று திருபீடச் செய்தித்தொடர்பகம் அறிவித்துள்ளது.
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், இறந்த சார்லஸின் அன்னை இரண்டாம் எலிசபெத் 1953-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முடிசூட்டப்பட்ட பிறகு நிகழும் முதல் முடிசூட்டு விழா இதுவாகும்.
இந்த முடிசூட்டு விழாவானது, பிரித்தானியாவின் பொது ஒளிபரப்பு நிறுவனமான BBC, நேரடியாகவும் முழுமையாகவும் ஒளிபரப்பும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்