தேடுதல்

அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கான இலச்சினை அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கான இலச்சினை 

அனைவரையும் வரவேற்று ஒன்றிணைக்கும் இடமாக திருஅவை

2024ஆம் ஆண்டு ஈக்குவதோர் நாட்டின் Quito நகரில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இடம்பெற உள்ளது 53ஆவது அனைத்துலக நற்கருணை மாநாடு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

2024ஆம் ஆண்டு ஈக்குவதோர் நாட்டின் Quito நகரில் செப்டம்பர் 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை இடம்பெற உள்ள 53ஆவது அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கான இலச்சினையும், பண்ணும்(கீதமும்) வெளியிடப்பட்டுள்ளன.

‘உலகைக் குணப்படுத்த உடன்பிறந்த உணர்வுநிலை’ என்ற தலைப்பில் இடம்பெற உள்ள இந்த அனைத்துலக நற்கருணை மாநாட்டிற்கான இலச்சினையில் நீல நிற சிலுவையின் பின்புறம் சிகப்பு நிறத்தில் இதயமும், மஞ்சள் நிற வட்டவடிவம் தூய ஆவியாரைக் குறிப்பதாகவும், 0 டிகிரி என குறிப்பிடப்பட்டிருப்பது உலகில் எந்த அட்சரேகையில் Quito நகர் உள்ளது என்பதைக் குறிப்பதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் யாவரும் சகோதரர், சகோதரிகள் (மத் 23:8) என்ற நற்செய்தி வார்த்தைகளை மையமாகக் கொண்டு திருஅவையை உடன்பிறந்த உணர்வை உள்ளடக்கிய இடமாக, அனைவரையும் வரவேற்று ஒன்றிணைக்கும் இடமாக மாற்றும் நோக்கத்துடன் இந்த கருத்தரங்கு வரும் ஆண்டில் இடம்பெற உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 May 2023, 14:23