தேடுதல்

கர்தினால் பியெத்ரோ பரோலின் கர்தினால் பியெத்ரோ பரோலின்  

உக்ரைன், இரஷ்யா இடையேயான திருப்பீடத்தின் அமைதி முயற்சி

அனைத்துப் போர்ச் செயல்களும், விரோதமான சூழலை உருவாக்க முற்படுமாயின், நிச்சயமாக அவை அமைதி நிலையை எட்டுவதற்கு உதவாது : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைன் மற்றும் இரஷ்யா நாடுகள் இரண்டுற்கும் திருப்பீடத்தின் அமைதிக்கான முயற்சிகள் பற்றி தெரியப்படுத்தப்பட்டன என்று கூறியுள்ளார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஒரு புத்தக வெளியீட்டிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த கர்தினால் பரோலின், ஏப்ரல் 30, இஞ்ஞாயிறன்று, ஹங்கேரியில் தனது அப்போஸ்தலிக்கத் திருத்தூதுப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்புகையில் இதுகுறித்து விமானத்தில் செய்தியாளர்களிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறிய வார்த்தைகளையும் நினைவுகூர்ந்தார். 

திருப்பீடம் எடுக்கும் அமைதி முயற்சிகள் குறித்து இரஷ்யாவும் உக்ரைனும் அறிந்திருக்கும் என்று தான் நம்பியதாகவும், தற்போது இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவைகள் மறுத்திருப்பது தனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்திருப்பதாகவும் கூறினார் கர்தினால் பரோலின்.

மேலும், தனக்குத் தெரிந்தவரை, திருப்பீடத்தில் அமைதி முயற்சிக்கான இந்தச் செய்தி, தகவல் தொடர்பு பிரச்சனைகளால் அவர்களுக்குக்  கிடைக்காமல் கூட போயிருக்கலாம் என்றும், தான் அளிக்கும் விளக்கங்கள் ஒருபுறம் இருந்தாலும் இருதரப்பினருக்குமே இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று தனக்குத் தெரியும் என்றும் மீண்டும் உறுதிப்படுத்தினார் கர்தினால் பரோலின்.

இரஷ்ய ஆர்தடாக்ஸ் கிறித்தவ சபையின் வெளியுறவு துறையின் தலைவரான பேராயர் அந்தோனி அவர்கள், மே 3, இப்புதனன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் நடைபெற்ற புதன் பொதுமறைக்கல்வி  உரையில் கலந்துகொண்டது மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார் கர்தினால் பரோலின்.

இரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒருவருக்கொருவர்மீதான குற்றச் சாட்டுகளை ஏற்படுத்திய கிரெம்ளின் Kremlin மீதான தொடர்ச்சியான தாக்குதல் மற்றும் அண்மையில் ட்ரோன் (drone) தாக்குதல் குறித்தும் கருத்து தெரிவித்த கர்தினால் பரோலின், அனைத்துப் போர்ச் செயல்களும், குறிப்பாக, அவை மிகவும் விரோதமான சூழலை உருவாக்க உதவுமாயின், நிச்சயமாக அவைகள் அமைதி நிலையை எட்டுவதற்கு உதவாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

போர்நிறுத்தம் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தபோது, இன்று போர்நிறுத்தத்திற்கான சூழ்நிலை உள்ளதா என்று தனக்குத் தெரியவில்லை. ஆனாலும் நம்புவோம். அப்படியொரு சூழ்நிலை இருக்குமேயானால்,  திருப்பீடத்தின் முயற்சியும் அந்த திசையில் செல்ல வேண்டும் என்று தான் நம்புவதாகவும் கூறிய கர்தினால் பரோலின், முதலில் போர்நிறுத்தம் நிகழலாம் என்றும், அதனைத் தொடர்ந்து அமைதிகான செயல்முறை (peace process) தொடங்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 May 2023, 14:13