தேடுதல்

கர்தினால் Michael Czerny கர்தினால் Michael Czerny 

திருஅவை மனிதமாண்பை எப்போதும் அங்கீகரிக்கிறது:கர்தினால் Czerny

கனடா மற்றும் அமெரிக்காவின் பூர்வீகக் இனமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் திருப்பீடம் Doctrine of Discovery-ஐ முதன்முதலில் ஒரு அறிக்கையாகவும், கூட்டு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது : கர்தினால் Michael Czerny

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மனித மாண்பை அங்கீகரிக்காத அனைத்து வார்த்தைகளையும் செயல்களையும் திருஅவை நிராகரிக்கிறது என்று கூறியுள்ளார் வத்திக்கானின் ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி மேம்பாட்டுத்துறையின் தலைவர் கர்தினால் Michael Czerny

மார்ச் 30, இவ்வியாழனன்று வெளியிடப்பட்ட Doctrine of Discovery (புதிய நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்புடைய திருஅவைக் கோட்பாடு) பற்றிய கூட்டு அறிக்கையை குறித்து வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு கூறிய கர்தினால் Czerny  அவர்கள், திருப்பீடம் மற்றும் வடஅமெரிக்க ஆயர்கள், உண்மையில் இது குறித்து வருந்துகிறார்கள் என்றும், இது பூர்வீகக் இனமக்களிடையே குணப்படுத்துவதற்கும் நல்லிணக்கத்திற்கும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த காலத்தில் நிகழ்ந்த வருந்தத்தக்க சம்பவங்களை மறுக்க விரும்பாமல், அவற்றை அடையாளம் கண்டு, அவற்றின் வரலாற்றுச் சூழலில் அவற்றை விட்டுவிட விரும்பாத திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கோரிய உரையாடல் மற்றும் செவிமடுக்கும் செயல்முறையின் விளைவே இந்தப் புதிய Doctrine of Discovery என்பதாகும் என்றும் தெரிவித்தார் கர்தினால் Czerny

Doctrine of Discovery -ஐ ஏன் திருப்பீடம் வெளியிட முடிவு செய்துள்ளது என்ற கேள்விக்குப் பதிலளித்தபோது, கனடா மற்றும் அமெரிக்காவின் பூர்வீக இனமக்கள் கேட்டுக்கொண்டதன் பெயரில் திருப்பீடம், Doctrine of Discoveryயை முதன்முதலில், ஓர் அறிக்கையாகவும், கூட்டு அறிக்கையாகவும் வெளியிட்டுள்ளது என்றும் தெரிவித்தார் கர்தினால் Czerny

2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் பொலிவியாவிற்கு திருத்தூதுப் பயணம் வந்தபோது தான் அங்கு இருந்ததாகவும், அப்போது அவர், திருஅவையின் புதல்வர் புதல்வியரின் கடந்த கால மற்றும் நிகழ்கால பாவங்களுக்காக மன்னிப்பு கேட்கும்படி திருஅவையைக் கேட்டுக் கொண்டார் என்றும், நாம் வெற்றி என்று அழைக்கும் இவையே கடவுளின் பெயரால் அமெரிக்காவின் பூர்வீக மக்களுக்கு எதிராக நாம் செய்த பாவங்கள் என்று அவர் எடுத்துரைத்ததையும் எடுத்துக்காட்டாகக் காட்டியுள்ளார் கர்தினால் Czerny

பூர்வீக இனமக்களின் நிலங்களையும் பொருட்களையும் உடைமையாக்கும் உரிமையை திருத்தந்தை காலனித்துவவாதிகளுக்கு வழங்கிய பதினைந்தாம் நூற்றாண்டின் மூன்று திருஅவை ஆணை மடல்களின் நோக்கம் மற்றும் முக்கியத்துவம் என்ன என்ற கேள்விக்குப் பதிலளித்த கர்தினால் Czerny, இப்போது நாம் இந்த விடயங்களை ஆணை மடல்கள் என்று அழைக்கிறோம், அமைதியைக் கொணரும் நோக்கத்தில் இது மிகவும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முத்திரையுடன் கூடிய அதிகாரப்பூர்வ அறிக்கை என்றும், எந்த நாட்டுத் தலைவரும் வெளியிடுவது போல இது ஒரு வகையான ஆணையே என்றும் விளக்கமளித்தார்.

மேலும், திருத்தந்தையின் ஆணை மடல் ஆதிக்கம், அடிபணிதல், நிலத்தை அபகரித்தல், அடிமைப்படுத்துதல் பற்றி பேசுகின்றன. அப்படிப்பட்ட ஒரு மரபிலிருந்து எப்படி முன்னேறுவது? தற்போதைய பதில் போதுமானதா? என்றும் வரலாற்று ரீதியாக கத்தோலிக்க திருஅவை பூர்வீக இனமக்களின் மீற முடியாத உரிமைகளை எப்போது உறுதிப்படுத்தியது என்றும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் விளக்கமாக பதிலளித்தார் கர்தினால் Czerny,

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2023, 13:25