தேடுதல்

காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா விளைநிலங்கள்  காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா விளைநிலங்கள்  

இப்பூமி வழங்கும் வளங்களைப் பயன்படுத்தும் முறையை அறிந்திருக்க..

அர்ஜென்டீனாவில் காலநிலை மாற்றம் மற்றும், பல்லுயிரினங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற 2வது பன்னாட்டு மாநாட்டிற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், கர்தினால் செர்னி.

மேரி தெரேசா: வத்திக்கான்

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமி நமக்கு வழங்கும் வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நாம் அறிந்திருப்பதைப் பொருத்தே வருங்காலம் அமையும் என்று,  ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் மைக்கிள் செர்னி அவர்கள் செப்டம்பர் 29, இவ்வியாழனன்று அர்ஜென்டீனாவில் ஒரு பன்னாட்டு மாநாட்டிற்கு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

அர்ஜென்டீனா நாட்டு Misiones மாநிலத்திலுள்ள பாப்பிறை கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில், காலநிலை மாற்றம், மற்றும், பல்லுயிரினங்கள் என்ற தலைப்பில் நடைபெற்ற 2வது பன்னாட்டு மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார், கர்தினால் செர்னி. 

இப்பூமியின் வருங்காலப் பாதுகாப்பின் பொறுப்பாளர்களான இளையோர், புதிய தலைமுறைகள் போன்றோரின் குரல்கள் கேட்கப்படவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது எனவும், அவர்களின் கனவுகளைப் பாதுகாத்து வழிநடத்தவேண்டியது நமது கடமை எனவும், கர்தினால் செர்னி அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்.

காலநிலை மாற்றத்தின் எதிர்விளைவுகளைக் குறைப்பதற்கு, பல்வேறு அரசு நிர்வாகங்களின் பங்கு குறித்து மீள்ஆய்வு செய்வதற்காக நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு செய்தி அனுப்பியுள்ள கர்தினால் செர்னி அவர்கள், அண்மை ஆண்டுகளில் அழிந்துவரும் பல்லுயிரினப் பாதுகாப்பு குறித்து அரசுகள் கவனம் செலுத்தவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 September 2022, 14:50