தேடுதல்

அருள்பணி Juan Antonio Guerrero Alves அருள்பணி Juan Antonio Guerrero Alves   (Society of Jesus)

திருப்பீடத்தின் நிதி நிலைமையில் வெளிப்படைத்தன்மை

வெளிப்படைத்தன்மையோடு இடம்பெற்ற இலண்டன் மாளிகை விற்பனை விவகாரம் திருப்தியாக உள்ளது - அருள்பணி Guerrero

மேரி தெரேசா: வத்திக்கான்

திருப்பீடத்தில் நிதி சார்ந்த விவகாரம், பல புதிய முறைகளில், வெளிப்படைத்தன்மையோடு கையாளப்பட்டு வருகின்றது என்று, திருப்பீட பொருளாதாரச் செயலகத்தின் தலைவர் அருள்பணி Juan Antonio Guerrero Alves அவர்கள் தெரிவித்துள்ளார்.

திருப்பீடத்தின் 2021ஆம் ஆண்டின் நிதி அறிக்கை குறித்து வத்திக்கான் ஊடகத்திற்குப் பேட்டியளித்துள்ள அருள்பணி Guerrero அவர்கள், திருப்பீடத்தின் பொருளாதாரத்தைப் பாதுகாப்பது, மற்றும், அதனைப் பேணிக்காப்பது ஆகியவை, சரியான பாதையில் செல்வதற்கு புதிய நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ளார்.

இதன் பயனாக, எதிர்பார்த்ததைவிட நல்ல பலன்கள் கிடைத்துள்ளன எனவும், மிக நிச்சயமற்ற காலம் ஒன்று முன்னே இருக்கிறது எனவும், திருப்பீடம், அமைப்புமுறை சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை இன்னும் கையாளவேண்டியிருக்கிறது எனவும், அருள்பணி Guerrero அவர்கள், அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

திருப்பீடத்தின் நிதி நிலைமையில் 3 கோடியே 30 இலட்சம் யூரோக்கள் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்த்திருந்தவேளை, முப்பது இலட்சம் யூரோக்களே பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், திருப்பீடத்தில் தியாகங்கள் செய்வதன் காலம் இன்னும் முடியவில்லை என்றும், இயேசு சபை அருள்பணி Guerrero அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளிப்படைத்தன்மையோடு இடம்பெற்ற இலண்டன் மாளிகையை விற்ற விவகாரம் திருப்தியாக உள்ளது என்று, பேட்டியில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ள அருள்பணி Guerrero அவர்கள், திருத்தந்தையின் மறைப்பணிக்கு குறைவான நிதி இருப்பது, திருஅவையின் பிரச்சனை என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2022, 16:11