தேடுதல்

புனித பேதுரு பெருங்கோவில் புனித பேதுரு பெருங்கோவில்  

கர்தினால் Farrell தலைமையில் திருப்பீட முதலீடுகள் குழு

திருப்பீட முதலீடுகளின் அறநெறி இயல்பை உறுதிசெய்யும் வழிகளுக்கென்று, கர்தினால் Kevin Farrell அவர்கள் தலைமையில் நான்கு பேர் கொண்ட புதிய முதலீடு குழு நியமிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா: வத்திக்கான்

கவலைகள், மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து வெளியேறி, மற்றவர்க்கு ஆறுதல், மற்றும், நம்பிக்கையின் அடையாளமாக நாம் வாழ்வதற்குத் தேவையான சக்தியை அருளுமாறு தூய ஆவியாரிடம் வேண்டுவோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூன் 07, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார்.

மற்றவர்க்கு ஆறுதல், மற்றும், நம்பிக்கையின் அடையாளமாக இருப்பதற்குத் தேவையான சிறப்பான முயற்சிகளை மேற்கொள்ள, தூய ஆவியாரின் நன்மைத்தனமும், படைப்பாற்றல்திறனும் நமக்கு உதவுமாறு, இந்நாளில் அவரிடம் மன்றைடுவோம் என்று, திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

திருப்பீட முதலீடுகள் குழு

மேலும், திருப்பீட முதலீடுகளின் அறநெறி இயல்பை உறுதிசெய்யும் வழிகளுக்கென்று, Kevin Joseph Farrell அவர்கள் தலைமையில் நான்கு பேர் கொண்ட புதிய முதலீடு குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் ஜூன் 07, இச்செவ்வாயன்று அறிவித்துள்ளது.

பொதுநிலையினர், குடும்பம் மற்றும், வாழ்வு திருப்பீட அவையின் தலைவரான கர்தினால் Farrell அவர்கள் தலைமையில் இயங்கும் இப்புதிய முதலீடு குழுவில், பிரித்தானியாவின் Jean Pierre Casey (RegHedgeஐ உருவாக்கியவர் மற்றும், அதன் தலைவர்); ஜெர்மனியின் Giovanni Christian Michael Gay (GmbH நிர்வாக இயக்குனர்); நார்வேயின் David Harris (Portfolio manager of Skagen Funds); அமெரிக்க ஐக்கிய நாட்டின் John J. Zona (Chief Investment Officer of Boston College) ஆகிய நால்வரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் பணிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 June 2022, 15:26