தேடுதல்

கர்தினால் பரோலின் மற்றும், சுவிட்சர்லாந்து நாட்டின் துணை அரசுத்தலைவர், Ignazio Cassis சந்திப்பு கர்தினால் பரோலின் மற்றும், சுவிட்சர்லாந்து நாட்டின் துணை அரசுத்தலைவர், Ignazio Cassis சந்திப்பு 

வத்திக்கான், சுவிட்சர்லாந்து நாடுகள் – 100 ஆண்டு உறவு

வத்திக்கான் நாட்டிற்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களின் பயணம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

வத்திக்கான் நாட்டிற்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையே தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளதையொட்டி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், அந்நாட்டில், நவம்பர் 7,8,9 ஆகிய மூன்று நாள்கள் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் துணை அரசுத்தலைவர், Ignazio Cassis, மற்றும், வெளிநாட்டுத் துறையின் அமைச்சர் ஆகியோர் விடுத்த அழைப்பை ஏற்று, அந்நாட்டிற்குச் சென்ற கர்தினால் பரோலின் அவர்கள், Einsiedeln என்ற நகரில், புனித பெனடிக்ட் துறவு சபையினரால் நிறுவப்பட்டுள்ள மரியன்னை திருத்தலத்தில், நவம்பர் 7, இஞ்ஞாயிறன்று சிறப்புத் திருப்பலியாற்றினார்.

நூற்றாண்டு நிறைவையொட்டி தான் மேற்கொண்டுள்ள பயணம், சுவிட்சர்லாந்தில் புகழ்பெற்ற '.கருநிற அன்னை'யின் திருத்தலத்தில் ஆரம்பமானது குறித்து கர்தினால் பரோலின் அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார்.

இத்திருத்தலத்திற்கு அடுத்தபடியாக, சுவிட்சர்லாந்தின் பாதுகாவலராகக் கருதப்படும் புனித நிக்கோலஸ் பெயரால், அந்நாட்டின் Flüeli-Ranft என்ற நகரில், நிறுவப்பட்டுள்ள புகழ்பெற்ற திருத்தலத்தையும் கர்தினால் பரோலின் அவர்கள் பார்வையிடுகிறார்.

வத்திக்கான் நாட்டிற்கும், சுவிட்சர்லாந்து நாட்டிற்கும் இடையே நிலவிவரும் தூதரக உறவுகள் குறித்து, நவம்பர் 8, இத்திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரு நாள்கள், Fribourg பல்கலைக் கழகத்தில் நடைபெறும் ஒரு கருத்தரங்கில் கர்தினால் பரோலின் அவர்கள் பங்கேற்கிறார்.

1586ம் ஆண்டு முதல் வத்திக்கானுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையே நிலவிவந்த உறவுகள், 1873ம் ஆண்டு தடைப்பட்டன என்பதும், பின்னர், இவ்விரு நாடுகளுக்கும் இடையே, 1920ம் ஆண்டு, தூதரக உறவுகள் புதுப்பிக்கப்பட்டன என்பதும், குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 November 2021, 14:14