தேடுதல்

கைத்துப்பாக்கிகள் கைத்துப்பாக்கிகள் 

தானியங்கும் ஆயுத அமைப்புகள் மனிதாபிமானச் சட்டங்களை மதிப்பதில்லை

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 1982ம் ஆண்டுக்கும், 2021ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இடம்பெற்ற 97 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 145 விதமான கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

உயிர்க்கொல்லி தானியங்கும் ஆயுதங்களைத் தயாரிக்கும் அமைப்புகள், உலகளாவிய மனிதாபிமான சட்டங்களை மதிப்பதாக இல்லையெனவும், அவை, உலகத்தின் அமைதி, மற்றும், உறுதியான தன்மைக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளன எனவும் திருப்பீட உயர் அலுவலகம் ஒன்று, பன்னாட்டு கூட்டமொன்றில் கூறியுள்ளது.

மரணத்தை வருவிக்கும் தானியங்கும் ஆயுத அமைப்புகளில் வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் குறித்து ஆய்வை மேற்கொள்ளும் அரசு நிபுணர்கள் குழு, இம்மாதம் 3ம் தேதி துவக்கியுள்ள முதல் அமர்வில் கலந்துகொண்ட, ஜெனீவாவில் ஐ.நா. அமைப்புகளுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் அலுவலகம், இவ்வாறு கூறியுள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவில், இம்மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் கூட்டத்தில், தன் கருத்துக்களைச் சமர்ப்பித்த இந்த திருப்பீட அலுவலகம், மரணத்தைக் கொணரும் தானியங்கும் ஆயுதங்களைச் சேமித்துவைப்பது, நகரங்களில் வாழும் மக்களின் உயிருக்கு கடும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறியது.

இதற்கிடையே, அமெரிக்க ஐக்கிய நாட்டில் இடம்பெறும் படுகொலைகளுக்கு பெரும்பாலும் கைத்துப்பாக்கிகளே பயன்படுத்தப்படுகின்றன எனவும், 1982ம் ஆண்டுக்கும் 2021ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் இடம்பெற்ற 97 துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 145 விதமான கைத்துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன எனவும், ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில், ஒவ்வொரு நாளும் 170க்கும் மேற்பட்ட சந்தைகள் மற்றும், தொழிற்சாலைகளில் கைத்துப்பாக்கிகள் விற்பனை செய்யப்படுகின்றன எனவும், ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 August 2021, 15:04