தேடுதல்

கொழும்பு நகரில் முக்கிய பொருளாதார மையம் கொழும்பு நகரில் முக்கிய பொருளாதார மையம் 

சிறந்த உலகளாவிய பொருளாதார அமைப்புமுறை

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், இளம் தொழில்முனைவோருக்கென, நவம்பர் 19, வருகிற வியாழன் முதல், 21, வருகிற சனிக்கிழமை முடிய, கணணி வழி கூட்டம் ஒன்று நடைபெறுகின்றது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

“பிரான்செஸ்கோவின் பொருளாதாரம்” என்ற தலைப்பில், இளம் பொருளாதார வல்லுனர்கள் மற்றும், தொழில்முனைவோருக்கென, நவம்பர் 19, வருகிற வியாழன் முதல், 21, வருகிற சனிக்கிழமை முடிய, இத்தாலியின் அசிசி நகரில் நடைபெறும் கணணி வழி கூட்டம் பற்றி, இந்திய ஆசிரியர் Anna Maria Geogy அவர்கள், வத்திக்கான் செய்தித்துறையிடம் தன் சிந்தனைகளைப் பதிவுசெய்துள்ளார்.

இந்த நிகழ்வு, உலகளாவிய பொருளாதாரத்தில், மனித மாண்பிற்கு முதலிடம் கொடுக்கவேண்டும் என்ற உந்துதலை, இளம் பொருளாதார வல்லுனர்களுக்கும், தொழில்முனைவோருக்கும் வழங்கும் என்று, தான் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த Anna Maria Geogy அவர்கள், நான் காண விரும்பும் மாற்றமாக, முதலில் தான் மாறவேண்டும் என்று கூறினார்.

வேலை, நிதி, கல்வி, செயற்கை நுண்ணறிவு போன்ற தலைப்புக்களை மையப்படுத்தி நடைபெறும் இந்த நிகழ்வு குறித்து, பெங்களூருவைச் சேர்ந்த Geogy அவர்கள் கூறுகையில், உலக அளவில் நாம் காண விரும்பும் மாற்றங்களைச் சிறாரிலிருந்து துவக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், இறைவா உமக்கே புகழ் (Laudato si’) என்ற திருமடல் மற்றும், அசிசி நகர் புனித பிரான்சிசின் வழித்தடங்களைப் பின்பற்றி, இளையோர், உலக அளவில் மாற்றத்தைக் கொணர்வதற்கு உந்துசக்தியாக, இந்த நிகழ்வு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவரும் உடன்பிறந்தோர் என்ற தனது அண்மைத் திருமடலில் வலியுறுத்தியுள்ள, நீதி, சமுதாயத்தில் அனைவரையும் ஒன்றிணைத்தல், நீடித்த நிலையான வளர்ச்சி போன்ற கூறுகளோடு உலகளாவிய பொருளாதாரம் அமைக்கப்பட, இளம் பொருளாதார நிபுணர்களைத் தூண்டும் நோக்கத்திலும், இந்த மூன்று நாள் மெய்நிகர் கூட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த கணணி வழி கூட்டத்திற்கென, இவ்வாண்டு மார்ச் மாதம் முதல், 1000த்திற்கும் மேற்பட்ட இளையோர் உழைத்து வந்தனர் என்றும், அவர்கள், பல்வேறு கிராமங்களுக்குச் சென்று, அங்குள்ள இளையோரின் கருத்துக்களைத் திரட்டிவந்தனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

17 November 2020, 14:58