தேடுதல்

கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி 

மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி திரும்பவேண்டும்

மத்திய கிழக்கு பகுதியிலும், அர்மேனியா, அசர்பைஜான் நாடுகளிலும் வாழ்வோர், உரையாடல் மற்றும் ஒப்புரவு வழிகளைக் கடைபிடிக்க, அப்பகுதிகளில் உழைத்துவரும் கீழைவழிபாட்டு முறை தலத்திருஅவைகள் உதவி செய்யவேண்டும் - கர்தினால் சாந்த்ரி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கீழை வழிபாட்டு முறை பாப்பிறை கல்லூரி, அக்டோபர் 20 இச்செவ்வாயன்று, உரோம் நகரில் தன் கல்வி ஆண்டை துவக்கியவேளையில், அங்கு உரையாற்றிய, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி திரும்பவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார்.

மத்திய கிழக்கு பகுதி நாடுகளில் வாழும் மக்களும், அர்மேனியா, அசர்பைஜான் நாடுகளில் வாழ்வோரும், உரையாடல் மற்றும் ஒப்புரவு வழிகளைக் கடைபிடிக்க, அப்பகுதிகளில் உழைத்துவரும் கீழைவழிபாட்டு முறை தலத்திருஅவைகள் உதவி செய்யவேண்டும் என்று கர்தினால் சாந்த்ரி அவர்கள் விண்ணப்பித்தார்.

மேலும், குடும்பம் என்ற சமுதாய அடித்தளம், பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானாலும், அது தொடர்ந்து நீடிக்கவேண்டும், ஏனெனில் அதற்கு இணையான அடித்தளம் மனித சமுதாயத்தில் கிடையாது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் ஓர் இணையதள கருத்தரங்கில் கூறினார்.

குடும்பத்தை மையப்படுத்தி, கொலம்பியா நாட்டில் நடைபெறும் மேய்ப்புப்பணி கூட்டத்தில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு, வாழ்வின் பாப்பிறை கலைக்கழகத்தின் தலைவரான பேராயர் வின்சென்சோ பாலியா அவர்கள், இணையவழி பகிர்ந்துகொண்ட உரையில் இவ்வாறு கூறினார்.

அன்பின் மகிழ்வு (Amoris Laetitia) என்ற திருத்தூது அறிவுரை மடலின் வழியே திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பத்தை மையப்படுத்தி திருஅவையின் மறுமலர்ச்சி இடம்பெறவேண்டும் என்று கேட்டுக்கொண்டிருப்பதை, பேராயர் பாலியா அவர்கள் தன் உரையில் நினைவுகூர்ந்தார்.

22 October 2020, 14:40