தேடுதல்

Vatican News
"Laudato Sì" வாரம் "Laudato Sì" வாரம் 

"Laudato Sì" வாரம், ஒன்றிணைந்து சிறந்த ஓர் உலகை அமைக்க

"அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளன" என்ற தலைப்பில், மே 16-24 வரை "Laudato Sì" வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாப்பதற்கு அழைப்பு விடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட "Laudato Sì" அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற திருமடல் வெளியிடப்பட்டதன் 5ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மே 16 இச்சனிக்கிழமையன்று,  "Laudato Sì" வாரம் துவக்கப்பட்டுள்ளது.

"அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புகொண்டுள்ளன" என்ற தலைப்பில், கடைப்பிடிக்கப்படும் இந்த வாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உழைக்கும் உலக கத்தோலிக்க இயக்கம் உள்ளிட்ட பல கத்தோலிக்க அமைப்புகளின் ஆதரவுடன்,  திருத்தந்தையும், ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையும் ஏற்பாடு செய்துள்ளனர்.

மே 24ம் தேதியன்று நிறைவுபெறும் இவ்வாரம், உலக செப நாளோடு முடிவடையும்.

நாம் எல்லாரும் ஒன்றிணைந்து சிறப்பான ஓர் உலகை எழுப்புவதற்கு அழைப்பு விடுக்கும் "Laudato Sì" வாரத்தில், உலகெங்கும் அனைத்து கத்தோலிக்க பங்குத்தளங்கள், மறைமாவட்டங்கள், துறவு சபைகள், பள்ளிகள், இயக்கங்கள் போன்ற அனைத்தும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது குறித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.

16 May 2020, 16:36