தேடுதல்

Vatican News
ஓவியர் இரஃபேல் அவர்களின் ஓவியங்கள் சிஸ்டீன் சிற்றாலயத்தில் பொருத்தப்படுதல் ஓவியர் இரஃபேல் அவர்களின் ஓவியங்கள் சிஸ்டீன் சிற்றாலயத்தில் பொருத்தப்படுதல்  (Giampaolo_Capone)

வத்திக்கானில் முதல்முறையாக ஓவியர் இரஃபேல் ஓவியங்கள்

புனித பேதுரு, மற்றும் புனித பவுல் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளை மையப்படுத்தி, ஓவியர் இரஃபேல் அவர்கள் உருவாக்கிய பத்து ஓவியங்கள், வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலை வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலத்தில் வாழ்ந்த உலகப் புகழ்பெற்ற இரஃபேல் சான்சியோ (Raphael Sanzio) அவர்களின் படைப்புக்களில் ஒரு சில, முதல் முறையாக, வத்திக்கானில், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

1520ம் ஆண்டு மரணமடைந்த ஓவியர் இரஃபேல் அவர்கள் மரணத்தின் ஐந்தாம் நூற்றாண்டையொட்டி, பிப்ரவரி 17ம் தேதி முதல், 23, வருகிற ஞாயிறு முடிய, அவரது ஓவியங்கள், வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

திருத்தூதர்களான புனித பேதுரு, மற்றும் புனித பவுல் ஆகியோரின் வாழ்க்கையில் நடந்த ஒரு சில நிகழ்வுகளைக் காட்டும் பத்து ஓவியங்கள், முதல் முறையாக வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் வைக்கப்பட்டுள்ளன.

1483ம் ஆண்டு இத்தாலியின் உர்பீனோ என்ற நகரில் பிறந்த இரஃபேல் அவர்கள், 1520ம் ஆண்டு, தன் 37வது வயதில் மரணமடைந்தார். மறுமலர்ச்சிக் காலத்தில் மிகப் புகழ்பெற்ற இத்தாலியக் கலைஞர்கள் மிக்கேலாஞ்சலோ மற்றும் லியோனார்தோ தா வின்சி ஆகிய இருவருக்கு இணையாக, இவரும் கருதப்படுகிறார்.

19 February 2020, 15:14