தேடுதல்

Vatican News
திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்த சீக்கிய மதத்தினர் திருத்தந்தையை வத்திக்கானில் சந்தித்த சீக்கிய மதத்தினர் 

உரோம் நகரில் சீக்கிய-கிறிஸ்தவ கருத்தரங்கு

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் அவர்கள் பிறந்ததன் 550ம் ஆண்டு நினைவைச் சிறப்பிக்கும் வகையில், "சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக, மனித உடன்பிறந்த நிலை" என்ற தலைப்பில், உரோம் நகரில் நடைபெற்ற கருத்தரங்கு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமயங்களைக் குறித்த ஆழந்த அறிவும், புரிதலும், வேற்று பாரம்பரியங்களின் செல்வங்களை உணர்வதற்கும், அவற்றுடன் அறிவுசார்ந்த உரையாடல் கொள்வதற்கும் உதவுகிறது என்று, உரோம் நகரில் நடைபெற்ற பலசமய உரையாடல் கருத்தரங்கில் கலந்துகொண்டோர் கூறினர்.

திருப்பீடத்தின் பல்சமய உரையாடல் அவையும், இத்தாலியில் உள்ள சீக்கியப் பணிக் கழகமும்,  அக்டோபர் 22, கடந்த செவ்வாயன்று, உரோம் நகரில் ஏற்பாடு செய்திருந்த சீக்கிய-கிறிஸ்தவ கருத்தரங்கில் கலந்துகொண்டோர் இவ்வாறு கூறினர்.

சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ் அவர்கள் பிறந்ததன் 550ம் ஆண்டு நினைவைச் சிறப்பிக்கும் வகையில், "சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்காக, மனித உடன்பிறந்த நிலை" என்ற தலைப்பில் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கத்தோலிக்கத் திருஅவையைச் சேர்ந்தவர்கள், வேற்று மதத்தினருடனும், நல்மனம் கொண்ட அனைவரோடும் நட்பை உருவாக்கவேண்டும் என்பதை மனதில் கொண்டு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை உருவாக்கப்பட்டது என்று, இவ்வவையின் தலைவர், கர்தினால் Miguel Ángel Ayuso Guixot அவர்கள், இக்கருத்தரங்கின் துவக்கத்தில் கூறினார்.

இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் அனைவரும், அக்டோபர் 23, இப்புதனன்று, திருத்தந்தை வழங்கிய பொது மறைக்கல்வி உரையில் பங்கேற்று, இறுதியில் திருத்தந்தையைச் சந்தித்து வாழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

24 October 2019, 15:04