தேடுதல்

Vatican News
உலக ஆயர்கள் மாமன்ற கூட்டம் உலக ஆயர்கள் மாமன்ற கூட்டம் 

அமேசான் மாமன்றத்தின் இரண்டாம் வார முதல் நாள்

பழங்குடியின மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக, அனைத்துலக அளவில் உதவிகள், சுற்றுச்சூழல் மதிப்பும் உணவுக்கான உரிமையும் போன்ற தலைப்புகளில் திங்கள் காலை அமர்வில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அமேசான் பகுதியை மையப்படுத்தி, வத்திக்கானில் நடைபெற்றுவரும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாம் வார முதல் நாளான இத்திங்கள் காலையில் இடம்பெற்ற கூட்டம் குறித்து, இத்திங்கள் பிற்பகலில் பத்திரிகையாளர் சந்திப்பு இடம்பெற்றது.

உரோம் நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் 5 மணிக்கு இடம்பெற்ற இச்சந்திப்பில், பிரேசில் நாட்டு ஆயர் Carlo Verzeletti, வெனிசுவேலா ஆயர், Jose Angel DIvasson Cleveti ஆகியோர் முதலில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கத்தோலிக்க வளர்ச்சித் திட்ட அமைப்புக்களின் பொதுச்செயலர், கனடா நாட்டைச் சேர்ந்த, Josianne Gauthier, வெனிசுவேலாவின் பழங்குடி இனத்தவர், Jose Gregorio Diaz Mirabal, திருப்பீட சமூகத் தொடர்புத்துறையின் தலைவர், Paolo Rufini, இயேசு சபை அருள்பணியாளர் Giacomo Costa ஆகியோரும் காலை அமர்வில் விவாதிக்கப்பட்டவை குறித்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் விவரித்தனர்.

பழங்குடியின மக்களின் உரிமைகள் மீறப்படுவதற்கு எதிராக, அனைத்துலக அளவில் உதவிகள், பல்வேறு இனங்கள், கலாச்சாரங்களுக்கிடையே தகவல் பரிமாற்ற உதவிகள், சுற்றுச்சூழல் மதிப்பும் உணவுக்கான உரிமையும் போன்ற தலைப்புகளில் காலை அமர்வில் விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன.

14 October 2019, 15:29