தேடுதல்

Vatican News
வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து அமேசான் பகுதி பூர்வீக இனத்தவர் வளங்கள் சுரண்டப்படுவதை எதிர்த்து அமேசான் பகுதி பூர்வீக இனத்தவர்  (ANSA)

அமேசான் பகுதி குறித்த ஆயர்கள் மாமன்ற வரைவு தொகுப்பு

அமேசான் சிறப்பு ஆயர்கள் மாமன்ற நடைமுறைகளில், திருஅவை முழுவதையும் ஈடுபடுத்தும் விதமாக, இந்த வரைவு தொகுப்பு, எல்லா நிலைகளில் உள்ளவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

வருகிற அக்டோபர் 6ம் தேதி முதல் 27ம் தேதி வரை, வத்திக்கானில் நடைபெறவிருக்கும், அமேசான் பகுதி குறித்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் கலந்துரையாடல்களுக்கென,  “Instrumentum Laboris” என்ற வரைவு தொகுப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் (மே,14,15) வத்திக்கானில் நடைபெற்ற, இந்த சிறப்பு ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது தயாரிப்பு கூட்டத்தில், இந்த வரைவு தொகுப்புக்கு இசைவு தெரிவிக்கப்பட்டது. இதன் முதல் தயாரிப்பு கூட்டம், 2018ம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்றது.

“அமேசான்: திருஅவைக்கும், ஒருங்கிணைந்த சுற்றுச்சூழலுக்கும் புதிய பாதை” என்ற தலைப்பில், அமேசான் பகுதி குறித்த சிறப்பு ஆயர்கள் மாமன்றம் நடைபெறும். இந்த ஆயர்கள் மாமன்றம் நடைபெறுவது குறித்து, 2017ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திருத்தந்தை அறிவித்தார்.

நம் பொதுவான இல்லமாகிய இப்புவியைப் பாதுகாப்பது குறித்து, 2015ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Laudato Si திருமடலின் பின்னணியில், இந்த மாமன்றத்தை திருத்தந்தை அறிவித்துள்ளார்.

18 May 2019, 15:29