தேடுதல்

Vatican News
திருத்தந்தையுடன் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு திருத்தந்தையுடன் கர்தினால் ஆஞ்சலோ பெச்சு  (Vatican Media)

புனிதர்பட்ட வழிமுறைகளுக்கு ஏற்ற எட்டு இறையடியார்கள்

புனிதர் பட்டம் வழங்கும் வழிமுறைகளுக்கு ஏற்றவர்கள் என்று, ஒரு பிரான்ஸ் நாட்டவர், இரு பிரேசில் நாட்டவர், 5 இத்தாலியர் என 8 இறையடியார்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

புனிதர் பட்டம் வழங்கும் வழிமுறைகளுக்கு ஏற்றவர்கள் என்று, எட்டு இறையடியார்களின் பெயர்களை, ஏப்ரல் 6, இச்சனிக்கிழமை மாலையில், திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார், புனிதர் பட்ட நிலைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் ஆஞ்சலோ பெச்சு.

1961ம் ஆண்டு, தன் 79ம் வயதில் இறையடி சேர்ந்த, பிரேசில் நாட்டவரான அருள்பணியாளர், வணக்கத்துக்குரிய இறையடியார் Donizetti Tavares de Lima அவர்களின் பரிந்துரையால் இடம்பெற்ற புதுமை குறித்த விவரங்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் சமர்ப்பித்தார், கர்தினால் பெச்சு.

மேலும், தங்களின் புண்ணியம் நிறை பண்புகளுக்காக, இத்தாலியின் அருள்பணியாளர், இறையடியார் Carlo Cavina, கப்புச்சின் துறவு சபையின் அருள்பணியாளர், இறையடியார் Raffaele da Sant’Elia a Pianisi,  அதே துறவு சபையைச் சேர்ந்த  அருள்பணியாளர், இறையடியார் Damiano da Bozzano, பெண் துறவி, இறையடியார் Consolata Betrone, பொதுநிலையினரான இறையடியார் Gaetana Tolomeo, பிரான்ஸ் நாட்டின் அருள்சகோதரர், இறையடியார் Vittorino Nymphas Arnaud Pagés, பிரேசில் நாட்டின் பொதுநிலை இறையடியார் Nelson Santana ஆகியோரின் பெயர்களும் சனிக்கிழமையன்று மாலையில், முழு விவரங்களுடன் திருத்தந்தையிடம் சமர்ப்பிக்கப்பட்டன.

08 April 2019, 16:22