தேடுதல்

Vatican News
உரோம் நகரிலுள்ள ஆங்கிலிக்கன் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் நகரிலுள்ள ஆங்கிலிக்கன் பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் 

கிறிஸ்தவ ஒன்றிப்பு விதிகளின் துணையுடன்....

திருஅவையில் இணைய விரும்பும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ குழுக்கள் குறித்து புதுப்பிக்கப்பட்ட புது விதிகளின் தொகுப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -  வத்திக்கான் செய்திகள்

கத்தோலிக்கத் திருஅவையில், ஆங்கிலிக்கன் குழுமங்களின் பணி, அவைகளுக்குரிய இடம் ஆகியவை குறித்த விதிமுறைகள் அடங்கிய அறிக்கையை, திருப்பீடத்தின் விசுவாசக் கோட்பாட்டு பேராயம், ஏப்ரல் 9, இச்செவ்வாயன்று வெளியிட்டுள்ளது.

1௦ ஆண்டுகளுக்கு முன்னர் 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் 4ம் தேதி, அப்போதையத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் வெளியிடப்பட்ட 'Anglicanorum Coetibus'  என்ற அப்போஸ்தலிக்க சட்ட விதிமுறை ஏட்டில் சில மாற்றங்களை புகுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலோடு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது, திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயம்.

திருஅவையில் இணைய விரும்பும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ குழுக்கள், திருப்பீட விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் கண்காணிப்பின் கீழ், அப்பகுதி கத்தோலிக்க மறைமாவட்டத்தில் இணைக்கப்பட்டு பணியாற்றுவர் எனக்கூறும் இந்த புதிய விதிமுறை, இதற்கு எடுத்துக்காட்டாக இங்கிலாந்தின் Walsingham, அமெரிக்க ஐக்கிய நாட்டின் St. Peters Chair, ஆஸ்திரேலியாவின் Our Lady of the Southern Cross ஆகியவைகளைக் குறிப்பிட்டுள்ளது.

திருஅவையின் திருமறைச் சட்டங்கள், கிறிஸ்தவ ஒன்றிப்புச் சட்டங்கள் போன்றவைகளின் துணையுடன் பல விதிகள் இந்த புதிய அறிக்கையில் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

09 April 2019, 16:54