தேடுதல்

Vatican News
பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள் பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள் 

பேச்சு சுதந்திரம், சமய சுதந்திர உரிமை பாதுகாக்கப்பட...

தங்களின் மனச்சான்றுக்கு விசுவாசமாக இருப்பதால், உலகின் பல பகுதிகளில், பாகுபாடு, சகிப்பற்றதன்மை, சிறைத்தண்டனை, பகைமை, ஏன் மரணத்தையும்கூட மக்கள் துணிச்சலுடன் எதிர்கொள்கின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

2030ம் ஆண்டின் ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் வெற்றிகரமாய் அமல்படுத்தப்படுவதற்கு, மக்களின் பேச்சு சுதந்திர உரிமை உட்பட, சமய சுதந்திர உரிமை உறுதியுடன் பாதுகாக்கப்படுவது இன்றியமையாதது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. கூட்டத்தில் உரையாற்றினார்.

ஐ.நா. மனித உரிமைகள் அவையின் நாற்பதாவது பொது அமர்வில், சமய சுதந்திரம் மற்றும் சமய நம்பிக்கை குறித்த கூட்டத்தில், மார்ச் 05, இச்செவ்வாயன்று உரையாற்றிய, ஜெனீவாவிலுள்ள ஐ.நா. மற்றும் ஏனைய பன்னாட்டு நிறுவனங்களுக்கு திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யுர்கோவிச் அவர்கள், இவ்வாறு கூறினார்.

மனிதரின் உள்ளாழத்தில் வேரூன்றப்பட்டுள்ள சமய சுதந்திர உரிமை, ஏனைய அனைத்து மனித உரிமைகளுடன் மலர்கின்றது எனவும், கடந்த பல ஆண்டுகளில், இந்த உரிமைகள் குறித்த உலகளாவிய சட்ட அமைப்பில் முன்னேற்றம் தெரிகின்றது என்று உரையாற்றிய பேராயர் யுர்கோவிச் அவர்கள், இவற்றுக்கு மத்தியில் இந்த உரிமைகள் மீறப்படுவது குறித்த அண்மை அறிக்கைகள் அதிர்ச்சியைத் தருகின்றன என்றும் கூறினார்

05 March 2019, 15:19