தேடுதல்

Vatican News
இந்திய அரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தில் மாணவர்கள் இந்திய அரசுத் தலைவர் மாளிகை அருங்காட்சியகத்தில் மாணவர்கள்  (AFP or licensors)

வாரம் ஓர் அலசல் – இளையோரே எழுச்சி கொள்வீர்

மனித வாழ்வு, குழந்தை, இளமை, முதுமை ஆகிய மூன்று முக்கிய பருவங்களை உள்ளடக்கியது. இவற்றில் இளமைக்காலம் பொற்காலம்.

மேரி தெரேசா & அ.சகோ.ரெக்சிட்டா ம.ஊ.ச – வத்திக்கான்

வாழ்வை, திறந்த மனதுடன் அணுகுகின்றவர்களும், பிறரது சிந்தனையக் கூர்ந்து கவனிப்பவர்களும், பன்முகத் தன்மையோடு வளர்கிறார்கள். இளையோரே, நீங்கள் இவ்வாறு வாழ்ந்து காட்டுங்கள், வளர்ந்து உயர்வடையுங்கள். இவ்வாறு அழைப்பு விடுக்கிறார், திருச்சி மரியின் ஊழியர் சபை அருள்சகோதரி ரெக்சிட்டா. தமிழ் ஆசிரியரான அ.சகோ. ரெக்சிட்டா அவர்கள், மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். வத்திக்கானில் நடைபெற்றுவரும் இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தையொட்டி, இளையோரே எழுச்சி கொள்வீர் என்ற தலைப்பில் தன் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறார், அ.சகோ. ரெக்சிட்டா. 

இளையோரே எழுச்சி கொள்வீர்
22 October 2018, 16:03