தேடுதல்

Vatican News
15வது உலக ஆயர்கள் மாமன்ற அமர்வுகளில் ஒன்று... 15வது உலக ஆயர்கள் மாமன்ற அமர்வுகளில் ஒன்று... 

நாம் இயங்கும் இடங்களில் இயேசுவை கண்டுகொள்ள...

குழந்தையின் வாழ்வில் குடும்பம், உடன் நடந்து செல்வதுபோல், திரு அவையும் தன் அங்கத்தினர்கள் வாழ்வில் இணைந்து நடைபோட வேண்டும்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

உலக ஆயர் மாமன்றக் கூட்டத்தின் வெள்ளிக்கிழமை அமர்வில், இளையோரின் வாழ்வில் குடும்பத்தின் முக்கிய இடம் குறித்து விவாதிக்கப்பட்டதாக போலந்து ஆயர்கள் தெரிவித்தனர்.

இளையோரின் வாழ்விலும், தெளிந்து தேர்தலிலும், அவர்களின் குடும்பங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதையும், குடும்பங்களைப்போல் திருஅவையும் ஒரு குடும்பமாக தன் குழந்தைகளின் வாழ்வில் உடன் நடந்து செல்கின்றது என்பதையும், ஆயர் மாமன்ற தந்தையர்கள் விவாதித்ததாக, போலந்து ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் Stanisław Gądecki அவர்களும், பேராயர் Grzegorz Ryś அவர்களும் எடுத்துரைத்தனர்.

குடும்பத்தின் மதிப்பை முதலில் உணர்ந்துகொள்ளும் இளையோர், அங்கிருந்து விசுவாசத்தையும், கடவுளையும் நோக்கி வருகின்றனர் என்று கூறிய போலந்து ஆயர்கள், குடும்பம், நண்பர்கள், பணியிடம், விடுதலை போன்றவற்றில் இயேசுவைக் கண்டுகொள்ள திரு அவை உதவ வேண்டியதும் வலியுறுத்தப்பட்டது என்றனர்.

ஒவ்வோர் இளையோரின் அழைப்பும், சிலுவையோடு இணந்ததாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் போலந்து ஆயர்கள் எடுத்துரைத்தனர்.

13 October 2018, 17:17