தேடுதல்

தென் கொரியாவில் உரையாற்றும் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் - கோப்புப் படம் தென் கொரியாவில் உரையாற்றும் பேராயர் பால் ரிச்சர்ட் காலகர் - கோப்புப் படம் 

அனைத்துலக அணுசக்தி அமைப்பிற்கு திருப்பீடத்தின் ஆதரவு

அமைதி, மற்றும் பாதுகாப்பானச் சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்கு திருப்பீடம் தன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குகிறது - பேராயர் காலகர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அணு ஆயுத பரவலைத் தடுத்தல், அணு ஆயுதக் களைவு, அணுசக்தி தொழில் நுட்பத்தை அமைதிக்காகப் பயன்படுத்துதல் போன்ற துறைகளில், திருப்பீடம் தன்னால் இயன்ற அளவு சிறப்பு பங்காற்றி வருவதாக, பன்னாட்டு கூட்டம் ஒன்றில், எடுத்துரைத்தார், பேராயர் பால் ரிச்சர்ட் காலகர்.

பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலராக பணியாற்றும் பேராயர் காலகர் அவர்கள், வியன்னாவில் நடைபெறும் அனைத்துலக அணுசக்தி அமைப்பின் 62வது பொது அமர்வில், செப்டம்பர் 17, இத்திங்களன்று  உரையாற்றிய வேளையில் இவ்வாறு கூறினார்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலும், அமைதி, மற்றும் பாதுகாப்பானச் சூழலை உருவாக்கும் நோக்கத்தோடு, அனைத்துலக அணுசக்தி அமைப்பு ஆற்றிவரும் பணிகளுக்கு திருப்பீடம் தன் ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்குகிறது என்று பேராயர் காலகர் அவர்கள் உறுதியளித்தார்.

அணுசக்தி தொடர்பாக உலகில் எடுக்கப்பட்டு வரும் அனைத்து நடவடிக்கைகளும், அணு ஆயுத பரவலைத் தடை செய்வதாகவும், அணு ஆயுதக் களைவை உறுதி செய்வதாகவும் அமையவேண்டும் என்பதை, பேராயர் காலகர் அவர்கள், தன் உரையில் வலியுறுத்தினார்.

அணு ஆய்வுகளில் வெளியாகும் கதிரியக்கம், சுற்றுச்சூழலில் உருவாக்கும் ஆபத்துக்கள் குறித்தும், அணு ஆயுதங்களுக்குச் செலவிடப்படும் தொகை குறித்தும், அணு சக்தியை அமைதிக்கென பயன்படுத்துவது குறித்தும், இக்கூட்டத்தில் உரையாற்றினார், பேராயர் காலகர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2018, 16:47