தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

நமது இறைநம்பிக்கையை புதுப்பித்துக் கொள்வோம்!

கென்யாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தால் பலர் இறந்துள்ள வேளை அம்மக்களுடன் ஆன்மிக ரீதியாக நெருக்கமாக இருக்கின்றேன் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

மேதினமான இன்று, உழைப்பாளரான புனித யோசேப்பை நினைவுகூரும் நாம், நம்முடைய ஒவ்வொரு பணியையும் அவரில் தொடங்கி அவரில் நிறைவைக் காணும் வகையில், நமது விசுவாசத்தைப் புதுப்பிக்கவும் அதிகரிக்கவும் இறைவனிடம் வேண்டுவோம் என்று கேட்டுக்கொண்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 1, புதன்கிழமை இன்று, உலக உழைப்பாளர் நாளை உலகெங்கினும் சிறப்பிக்கும் வேளை, தான் வெளியிட்டுள்ள மூன்று குறுஞ்செய்திகளில் முதலாவது செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார் திருத்தந்தை.

கென்ய மக்களுடன் உடனிருக்கின்றேன்

கென்யாவில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் பல உயிர்களை பலிவாங்கியுள்ளதுடன், பரந்த பகுதிகளை அழித்திருக்கும் இந்த வேளையில், தான் ஆன்மிக ரீதியாக அம்மக்களுடன் நெருக்கமாக இருப்பதாகத் தனது இரண்டாவது குறுஞ்செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்யவும்  விசுவாசிகளுக்கு அழைப்புவிடுத்துள்ளார்.

மூன்று இறையியல் நற்பண்புகள்

நம்பிக்கை, விசுவாசம், பிறரன்பு ஆகிய மூன்று இறையியல் நற்பண்புகள் இறைவனின் பெரும் வரங்களாக அமைந்துள்ளன என்று எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, இம்மூன்றும் இல்லாமல், நாம் விவேகமுள்ளவர்களாகவும், நியாயமானவர்களாகவும், வலிமையானவர்களாகவும், மிதமானவர்களாகவும் இருக்கலாம், ஆனால் நாம் அன்புகூரப்படாதபோதும் அன்புகூரும் இதயம் நம்மிடம் இருக்காது, அல்லது எல்லா நம்பிக்கைக்கும் எதிராகத் துணிவு கொள்ளும் நம்பிக்கையும் நமக்கு இருக்காது என்றும் தனது குறுஞ்செய்தியில் விளக்கியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 May 2024, 15:38