தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நாம் அமைதியின் மறைத்தூதர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம்

வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் நம் சகோதரர் சகோதரிகளாக ஏற்பதும், இயேசு கொண்டுவந்த அமைதி அனைவருக்கும் உரியது என்று நம்புவதும் நம்மைச் சிறந்த மறைத்தூதர்களாக வாழத் தூண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

நாம் அமைதியின் மறைத்தூதர்களாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், இந்தத் தேர்வு நமக்கு அமைதியைத் தரும் என்றும் குறுஞ்செய்தி ஒன்றில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 16, இவ்வியாழனன்று வெளியிட்ட தனது டுவிட்டர் குறுஞ்செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அனைவருக்கும் நம் இதயங்களில் இடம் கொடுப்பதும், வேறுபாடுகள் தடைகள் அல்ல, மற்றவர்கள் நம் சகோதர சகோதரிகள் என்றும், இயேசு உலகிற்குக் கொண்டுவந்த அமைதி அனைவருக்கும் உரியது என்றும் நம்புவதுமே இதன் பொருள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 May 2024, 14:53