தேடுதல்

மெரிமேக் கல்லூரியின் தலைவர் மற்றும் பொறுப்பாண்மையாளர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை மெரிமேக் கல்லூரியின் தலைவர் மற்றும் பொறுப்பாண்மையாளர்களைத் திருப்பீடத்தில் சந்திக்கும் திருத்தந்தை   (Vatican Media)

சவால்களை எதிர்கொள்வதற்கு கல்வி உதவ வேண்டும்!

எதிர்காலத்தை குறிக்கோளாகக் கொண்டு, ஒருங்கிணைவு உணர்வின் அடிப்படையில் மனிதநேயத்தைக் கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கல்வியின் ஒவ்வொரு அம்சத்திலும், தேர்ந்துதெளிதல்  மற்றும் முடிவெடுக்கும் திறனை நோக்கி மாணவர்களை வழிநடத்துவது, வகுப்பறைகளின் சுவர்களை விரிவுபடுத்துவது, கோட்பாடு மற்றும் நடைமுறையில், ஒருங்கிணைவு, பகிர்வு, தோழமை ஆகியவற்றை உருவாக்கக்கூடிய அனைத்து இடங்களுக்கும் கல்வி சென்றடைவது முக்கியம் என்று சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.

மே 10, இவ்வெள்ளியன்று, மெரிமேக் கல்லூரியின் தலைவர் மற்றும் பொறுப்பாண்மையாளர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது, இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு தலைப்புகளின்கீழ் தனது சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.

சவால்களை எதிர்கொள்ள கல்வி கற்பிப்பது

முதலில் சவால்களை எதிர்கொள்ள கல்வி கற்பிப்பது என்ற தலைப்பில் மனதின் மொழி, இதயத்தின் மொழி, கைகளின் மொழி ஆகிய மூன்று மொழிகளைக் குறிப்பிட்ட திருத்தந்தை, நாம் என்ன உணர்கிறோம் மற்றும் செய்கிறோம் என்பதை சிந்திக்கும் திறன்; நாம் நினைப்பதையும் செய்வதையும் உணரும் திறன்; மற்றும் நாம் உணரவதையும் நினைப்பதையும் செய்யும் திறன் எனவும் அவற்றிற்கு விளக்கமளித்தார்.

ஒருங்கிணைவில் வளர கல்வி கற்பிப்பது

இரண்டாவதாக, ஒருங்கிணைவில் வளர கல்வி கற்பிப்பது குறித்து பேசிய திருத்தந்தை, இங்குப் புதிய தலைமுறையினர் சிரமங்களை வாய்ப்புகளாகப் பார்க்கவும், எதிர்காலத்தை குறிக்கோளாகக் கொண்டு, செல்வம் மற்றும் வெற்றியை அல்ல, மாறாக அன்பைப் போல, ஒருங்கிணைவு உணர்வின் அடிப்படையில் மனிதநேயத்தைக் கட்டமைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் சுட்டிக்கானார்.

இது சம்பந்தமாக பார்க்கும்போது, இன்றைய உலகமயமாக்கல் செயல்முறை, தனிமைப்படுத்தல், ஓரங்கட்டப்படுதல் மற்றும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் கலாச்சாரம் போன்ற அதன் எதிர்மறையான அம்சங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒருங்கிணைவை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துதல் போன்ற நேர்மறையான அம்சங்களையும் இது கொண்டுள்ளது என்று உரைத்த திருத்தந்தை, அறியப்படாத வழிமுறைகள் மற்றும் சாத்தியக்கூறுகள்; காலநிலை பேரழிவுகள் மற்றும் போர்களின் நிகழ்வுகளில் இது அண்மைய காலங்களில் நிகழ்வதை நாம் பார்த்திருக்கிறோம் என்றும் எடுத்துக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 May 2024, 16:27