தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தை பிரான்சிஸ்.   (ANSA)

திருஅவையில், உலகில் பணிக்கான அழைப்பைக் கண்டறிய முயல்வோம்

நம்பிக்கையின் திருப்பயணிகளாகவும், அமைதியின் கைவினைஞர்களாகவும் நாம் மாறுவோம்

மெரினா ராஜ் – வத்திக்கான்

தூக்கத்திலிருந்து விழித்தெழுவோம், அலட்சிய மனப்பான்மையிலிருந்து வெளிவருவோம் என்றும், திருஅவையிலும் உலகிலும் நமது பணிக்காண அழைப்பு என்ன என்பதை ஒவ்வொருவரும் கண்டறிய முயல்வோம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றினைப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஏப்ரல் 20 சனிக்கிழமை  ஹேஸ்டாக் திருஅவை மற்றும் உலகில் பணிக்கான அழைப்பு என்ற தலைப்பில் இவ்வாறு தனது கருத்துக்களைப் பதிவிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சில சமயங்களில் நம்மை நாமே பூட்டிக்கொண்ட சிறைக் கம்பிகளைத் திறப்போம் என்றும் அச்செய்தியில் வலியுறுத்தியுள்ளார். 

திரு அவையிலும் உலகிலும் நமது பணிக்கான அழைப்பு என்ன என்பதை ஒவ்வொருவரும் கண்டறிய முயல்வோம் என்றும், இதனால் நம்பிக்கையின் திருப்பயணிகளாகவும், அமைதியின் கைவினைஞர்களாகவும் நாம் மாறுவோம் என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 April 2024, 13:30