தேடுதல்

வத்த்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிர்த்த இயேசுவின் படம் வத்த்திக்கான் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உயிர்த்த இயேசுவின் படம்  (Vatican Media)

இயேசு நம் அனைவருக்காகவும் உயிர்த்தெழுந்தார்

உயிர்த்த இயேசுவின் மேல் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை நமது அச்சத்தை விரட்டுகின்றது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசு தனக்காக மட்டும் உயிர்த்தெழவில்லை மாறாக நம் அனைவருக்காகவும் உயிர்த்தெழுந்தார் என்றும், நம் வாழ்வில் நிறைவேறாத எல்லா மகிழ்ச்சியையும் மீட்டுக்கொள்வதற்காக அவர் உயிர்த்தெழுந்தார் என்றும்  தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் 4 பாஸ்கா எண்கிழமையின் வியாழன் அன்று இயேசுவின் உயிர்ப்பை முன்னிலைப்படுத்தி இவ்வாறு தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உயிர்த்த இயேசுவின் மேல் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை நமது அச்சத்தை விரட்டுகின்றது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பானது கல்லறையை மூடியிருந்த கல் நீக்கப்பட்டது போல நமது துயரத்தை நீக்குகின்றது என்றும், இயேசு தனக்காக மட்டும் உயிர்த்தெழவில்லை, நமக்காகவும், நம் வாழ்வில் நிறைவேறாமல் இருந்த எல்லா மகிழ்ச்சியையும் மீட்டுக்கொள்வதற்காகவுமே அவர் உயிர்த்தெழுந்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2024, 11:02