தேடுதல்

காலியாயிருந்த கல்லறை காலியாயிருந்த கல்லறை  (© Simon Lehmann - PhotoGranary)

இயேசுவில் வெளிப்படுத்தப்பட்ட இறையன்பின் அழகை கண்டுகொள்ள

கடவுள் நம்மை கனிவு மற்றும் கருணையுடன் அன்புகூர்கிறார் என்ற நற்செய்தியின் மகிழ்வை நம் வாழ்க்கைச் சான்று வழியாக உலகம் முழுவதும் எதிரொலிக்க அழைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

கடவுள் நம்மை கனிவு மற்றும் கருணையுடன் அன்புகூர்கிறார் என்பதில் நற்செய்தியின் மகிழ்வு அடங்கியுள்ளது என ஏப்ரல் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 

 

கடவுள் நம்மை கனிவுடனும் கருணையுடனும் அன்புகூர்கிறார் என்பதில் நற்செய்தியின் மகிழ்வு அடங்கியுள்ளது என்பதை  அறிந்துள்ள நாம், இந்த மகிழ்வின் செய்தியை நம் வாழ்க்கைச் சான்று வழியாக உலகம் முழுவதும் எதிரொலிக்க உதவும்படி அழைப்புப் பெற்றுள்ளோம் என்ற நினைவூட்டலையும் தன் டுவிட்டர் செய்தியில் முன்வைத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

அதே டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ள இறையன்பின் அழகை ஒவ்வொருவரும் கண்டுகொள்வார்களாக என மேலும் கூறியுள்ளார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை ஆங்கிலத்தில் மட்டும் 5,370க்கும் மேற்பட்ட டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 April 2024, 14:58