தேடுதல்

கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கல்லூரி மாணவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ்  (Vatican Media)

கிறிஸ்துவின் ஆளுமை கொண்டவர்களாக வாழ்வோம்

ஒவ்வொரு மனிதனையும் போலவே, கடவுள் நம்மை தனது குழந்தைகளாக இருக்க அழைத்துள்ளார்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இறைவன் மீது நாம் கொண்ட முதல் அன்பினை உயிருள்ளதாக வைத்திருப்பது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமை, எல்லாவிதமான அழைத்தல்களும் ஒரு முன்னுரிமை பெற்ற அன்பினாலேயே உருவாகின்றன என்றும் கிறிஸ்துவின் ஆளுமை கொண்டவர்களாக வாழ வேண்டும் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.   

ஏப்ரல் 4 வியாழன் வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் பியோ இலத்தீன் அமெரிக்கா, பியோ பிரசிலியானோ, மெக்சிகானோ குருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏறக்குறைய 275 பேரை சந்தித்தபோது இவ்வாறு தனது கருத்துக்களைக் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் கருத்துக்கள் மாணவர்களுக்கு எழுத்து வடிவில் வழங்கப்பட்டது.

ஒவ்வொரு மனிதனைப் போலவும், இறைவனின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்ட நம் ஒவ்வொருவரிடமும் அவரை நெருங்கிச் செல்லும் வகையில், மற்றவர்களுக்காக நம்மைக் கையளித்தல் என்னும் பணியை ஒப்படைத்துள்ளார் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கடவுளின் இப்பணையினைச் செய்வதே நமது அன்பின் குறிக்கோள் என்றும் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு ஆணும், பெண்ணும், கிறிஸ்துவைத் தலையாகக் கொண்ட உடலின் உறுப்பினர்களாக என் கண்களுக்குத் தெரிகின்றார்கள் என்று கூறிய திருத்தந்தை அவர்கள், கிறிஸ்துவின் ஆளுமையில் வாழ்வது என்பது இயேசுவின் உண்மையான அடையாளமாக இருத்தல் என்றும் கூறினார்.

நமது வாழ்வின் ஒவ்வொரு சூழ்நிலையையும், கடவுள் முன்னிலையில் செபத்தில் வைத்து வெரோணிக்கா இயேசுவின் முகத்தை துடைத்தது போல நாம் ஒவ்வொருவரின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

இரண்டாவதாக திருநற்கருணை ஆண்டவர் முன் நம்மையேக் கையளித்தல் நான் குடிக்கப்போகும் துன்பக் கிண்ணத்தில் உங்களால் குடிக்க இயலுமா? என்ற கேள்வி வழியாக இயேசு மறைசாட்சிக்கான வெறும் கோட்பாட்டை நாடவில்லை மாறாக நம்மைத் துறந்து அவருடையப் பணியினைச் செய்வதற்கு அழைப்புவிடுக்கின்றார் என்றும் கூறினார்.

நமது படிப்பு, பணி, ஓய்வு, முடிவுகள், அன்றாட வாழ்வு, இவை அனைத்தும் இதன் அடிப்படையிலேயே அமையவேண்டும் என்று வலியுறுத்திய திருத்தந்தை அவர்கள் செபம் மட்டுமல்லாது செபத்துடன் கூடிய பணியினைச் செய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், நமது பாதையில் கடவுளால் வைக்கப்பட்ட மனிதர்களான உடன் நண்பர்கள், உருவாக்குனர்கள், சுழல் ஆகிய அன்னைத்தையும் குறைவாக மதிப்பிட வேண்டாம் என்றும் கூறினார்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 April 2024, 11:09