தேடுதல்

தாக்குதல் நடந்த வணிக வளாகம் தாக்குதல் நடந்த வணிக வளாகம்  (ANSA)

வன்முறையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் செய்தி

சிட்னி பிரான்செஸ்கோவின் Bondi Junction உள்ள Westfield வணிக மையத்தில் ஒர் ஆண் உட்பட 5 பெண்கள் என ஆறு பேர், 40 வயது மதிக்கத்தக்க மனிதரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த வன்முறைத் தாக்குதல்களால் இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆறுதலையும் ஆன்மிக நெருக்கத்தையும் வழங்குவதாகவும், பாதிக்கப்பட்ட நாட்டின்மீது ஆறுதலையும் ஆற்றலையும் அளிக்கும் இறைவனின் ஆசீருக்காக வேண்டுவதாகவும் இரங்கல் தந்திச்செய்தி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடச்செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் கையெழுத்திடப்பட்டு அனுப்பப்பட்ட திருத்தந்தையின் இரங்கல் தந்திச் செய்தியானது, சிட்னி உயர் மறைமாவட்டப் பேராயர் அந்தோனி ஃபிசர் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அன்புக்குரியவர்களை இழந்து  வருந்தும் குடும்பத்தார் அனைவருக்கும் தன் ஆறுதலை வெளிப்படுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், காயமடைந்தவர்கள் விரைவில் குணம்பெற செபிப்பதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சிட்னி பிரான்செஸ்கோவின் Bondi Junction உள்ள Westfield வணிக மையத்தில் ஒர் ஆண், 5 பெண்கள் என ஆறு பேர், 40 வயது மதிக்கத்தக்க மனிதரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். பின் அந்த மனிதரும் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட அறுவரில் ஒருவரான தாயின் ஒன்பது மாத குழந்தை ஒன்று தீவிர மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வன்முறைத்தாக்குதலை நடத்தியவர் யார்? என்ன காரணம் என்ற விசாரணை நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் சிட்னி காவல்துறையினர் ஆஸ்திரேலிய உள்ளூர் ஊடக செய்திகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 April 2024, 11:14