தேடுதல்

கர்தினால்கள் அவைக்கூட்டம் (கோப்பு படம்) கர்தினால்கள் அவைக்கூட்டம் (கோப்பு படம்) 

வத்திக்கானில் திருத்தந்தையுடன் C-9 கர்தினால்கள் அவை கூட்டம்

திருஅவையை வழிநடத்த 2013ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் தேதி பொறுப்பேற்ற திருத்தந்தை பிரான்சிஸ், அவ்வாண்டே செப்டம்பர் 28ஆம் தேதி C-9 கர்தினால்கள் அவையை உருவாக்கினார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அனைத்துலக திருஅவையின் நிர்வாகத்தில் துணைபுரியவும், தலைமை நிர்வாகத் துறைகளை சீரமைக்கவும் என 2013ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் துவக்கப்பட்ட C-9 கர்தினால்கள் அவை ஏப்ரல் 15 திங்கள் வத்திக்கானில் திருத்தந்தையுடன் தன் கூட்டத்தை துவக்கியது.

திருஅவையை வழி நடத்தும் பொறுப்பை 2013ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் தேதி ஏற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவ்வாண்டே செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி C-9 என்ற கர்தினால்களின் உயர்மட்ட அவையை உருவாக்கி அக்டோபர் மாதம் முதல்தேதி அதன் முதல் கூட்டத்தை வழிநடத்தினார்.

கடைசியாக இவ்வாண்டு பிப்ரவரி 5 முதல் 7 வரை நடத்தப்பட்ட C-9 கூட்டத்தில் உலக ஆயர் மாமன்றத்திற்கான தயாரிப்புக்கள், நற்செய்தி அறிவிப்புப் பணிகள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி கொணரப்பட்ட புதிய விதிகளின்படி வடிவமைக்கப்பட்ட C-9 கர்தினால்கள் அவை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்; வத்திக்கான் நகர நிர்வாக ஆளுநர், கர்தினால் Fernando Vérgez Alzaga; Kinshasa பேராயர், கர்தினால் Fridolin Ambongo Besungu; மும்பை பேராயர், கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியாஸ்; பாஸ்டன் பேராயர், கர்தினால் Seán Patrick O'Malley; பர்ச்சலோனா பேராயர், கர்தினால் Juan José Omella Omella; கியூபெக் பேராயர், கர்தினால் Gérald Lacroix; லக்ஸம்பர்க் பேராயர், கர்தினால் Jean-Claude Hollerich; பிரேசில் நாட்டு கர்தினால் Sérgio da Rocha ஆகியோரை அங்கத்தினர்களாகக் கொண்டுள்ளதுடன், ஆயர் Marco Mellino அவர்களை செயலராகவும் கொண்டுச் செயல்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 April 2024, 15:28