தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்   (AFP or licensors)

நம்பிக்கை மற்றும் அமைதியின் விதைகளை நம்மால் விதைக்க இயலும்

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி சிறப்பிக்கப்படும் இறையழைத்தலுக்கான இறைவேண்டல் தினத்திற்குரிய செய்தியின் மையக்கருத்துடன் திருத்தந்தையின் டுவிட்டர்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கை நிலைகளில், நமக்கேயுரிய சிறு வழிகளில், தூய ஆவியாரின் துணையோடு நம்பிக்கை மற்றும் அமைதியின் விதைகளை நம்மால் விதைக்க இயலும் என நம்பிக்கையூட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் இறையழைத்தலுக்கான இறைவேண்டல் தினத்திற்கென இம்மாதம் 19ஆம் தேதி புனித யோசேப்பு திருவிழாவன்று செய்தி வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அச்செய்தியின் மையக்கருத்தை வைத்து மார் 21 வியாழக்கிழமையன்று டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வொருவரும், தாங்கள் பெற்றுள்ள தனிவரங்களின் துணைகொண்டு, ஒருவருக்கொருவர் செவிமடுத்து, ஒன்றிணைந்து நடைபோட்டு, தூய ஆவியானவரின் பாதையைக் கண்டு கொள்வோம் என இறையழைத்தலுக்கான செபநாள் செய்தியில் அழைப்புவிடுத்திருந்தார் திருத்தந்தை.

விழித்தெழுந்து, பிறன்பின் அப்போஸ்தலர்களாகவும், நம்பிக்கையின் தூதர்களாகவும் செயலாற்றி, மகிழ்ச்சியின் தூதர்களாக, புதிய வாழ்வின் ஆதாரமாக, உடன்பிறந்த நிலை, அமைதி ஆகியவைகளின் கலைஞர்களாக செயல்படுவோமாக என தன் இறையழைத்தல் செபநாளுக்கான செய்தியில் மேலும் விண்ணப்பித்திருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2024, 14:32