தேடுதல்

இளம்வயதில் திருத்தந்தை பிரான்சிஸ் இளம்வயதில் திருத்தந்தை பிரான்சிஸ் 

இயேசு சபையில் இணைந்த துறவற வாழ்வின் தொடக்க நாள்

1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள் இயேசு சபையில் தனது துறவற வாழ்வைத் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்

மெரினா ராஜ் – வத்திக்கான்

இயேசு சபையில் நுழைந்து தனது துறவற வாழ்வைத் தொடங்கிய நாளை மார்ச் 11 திங்கள்கிழமை சிறப்பிக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ். 

1958ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள் இயேசு சபையில் தனது துறவற வாழ்வைத் துவக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 1969 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் குருவாக அருள்பொழிவு பெற்றார். 1973ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் தனது துறவற வாழ்வில் இறைவனுக்கு தன்னை நிரந்தரமாக அர்ப்பணிக்கும் பொருட்டு நித்திய வார்த்தைப்பாட்டினையும் ஏற்றார்.     

வருகின்ற மார்ச் 13 புதன்கிழமை திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் 11ஆம் ஆண்டை சிறப்பிக்க உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். திருஅவையை வழிநடத்தும் பொறுப்பினை ஏற்று 266ஆவது திருத்தந்தையாக திருஅவையைச் சீரும் சிறப்புமாக வழிநடத்தி வருகின்றார்.  

1953ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் நாள் ஜார்ஜோ பெர்கோலியோ என்னும் இயற்பெயர் கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது 17ஆவது வயதில் குருவாக வேண்டும் என்னும் விருப்பம் கொண்டு துறவறத்தில் இணைந்தார்.

செப்டம்பர் 21 வியாழன் அன்று திருஅவை நற்செய்தியாளரான புனித மத்தேயு திருவிழாவை சிறப்பிக்கும் நாளில், தான் அழைத்தல் வாழ்விற்குள் நுழைந்ததாகப் பலமுறை தெரிவித்துள்ள திருத்தந்தை அவர்கள், புனித மத்தேயு திருவிழா திருப்பலிக்கு முன்பாக ஒப்புரவு அருளடையாளம் பெற விரும்பினார். அதன்பின்னரே இறை இரக்கத்தின் ஆற்றலால் தனது வாழ்வை இறையழைத்தலுக்காக அர்ப்பணித்தார்.

திருத்தந்தையின் டுவிட்டர் குறுஞ்செய்தி

செபம் நம் இதயங்களை விரிவுபடுத்துகிறது, நமது சுயநலத்திலிருந்து நாம் கீழிறங்கி வர உதவுகின்றது. பிறரது குரலுக்கு செவிசாய்க்கவும், அமைதியான சிந்தனையை நம்மில் உருவாக்கவும் வழிவகுக்கின்றது என்று ஹேஸ்டாக் இறைவேண்டல் ஆண்டு என்ற தலைப்பில் தனது கருத்துக்களை டுவிட்டர் குறுஞ்செய்தியாகப் பதிவிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 March 2024, 10:50