தேடுதல்

உரோம் யூதக் கோவிலில் திருத்தந்தை உரோம் யூதக் கோவிலில் திருத்தந்தை 

திருத்தந்தைக்கு யூதக் குருக்களின் நன்றிக் கடிதம்

பகைமையின் இடத்தில் புரிந்துகொள்ளுதலை விதைப்பதில் திருஅவையின் முயற்சிகள் நம் சமூகத்திலும் வரலாற்றிலும் அழிக்கமுடியாத சுவடுகளை விட்டுச் செல்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் யூத விரோதப்போக்குகளுக்கு தன் எதிர்ப்பைக் காட்டிவருவதற்கும், உலகம் முழுவதும் உள்ள யூதர்களை நோக்கித் தன் கரங்களை விரித்து வருவதற்காகவும் நன்றியை வெளியிட்டுள்ளனர் யூத மதக் குருக்களும்  வல்லுனர்களும்.

யூத மற்றும் கிறிஸ்தவ மதங்களிடையே கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் குழுவைச் சேர்ந்த யூத மத குருக்களும் வல்லுனர்களும் இணைந்து திருத்தந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த நன்றி வெளியிடப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளான முயற்சிகளால் கட்டியெழுப்பப்பட்ட உறவுகள் கூட இன்றைய சமூகத்தில் ஆட்டம் கண்டு வருகின்றன என்பதை தங்கள் கடிதத்தில் சுட்டிக்காட்டும் யூத குருக்களும் வல்லுனர்களும், பகைமையின் இடத்தில் புரிந்துகொள்ளுதலையும், விரோதத்தின் இடத்தில் நட்புணர்வையும், கண்டனங்களின் இடத்தில் புரிந்துணர்வையும் விதைப்பதில் திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகள் நம் சமூகத்திலும் வரலாற்றிலும் அழிக்கமுடியாத சுவடுகளை விட்டுச் சென்றுள்ளன என பாராட்டியுள்ளனர்.

விடாமுயற்சி, நம்பிக்கை, மனவுறுதி ஆகியவை அதிகம் அதிகமாகத் தேவைப்படும் இன்றைய உலகில் திருத்தந்தையின் Nostra Aetate ஏடு, மனித குலத்தின் உடன்பிறந்த நிலை எத்தகைய சூழலிலும் மீட்டெடுக்கப்படவல்லது என்பதை வலியுறுத்துவது புதிய நம்பிக்கைகளைத் தருகின்றது எனவும் திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள தங்கள் கடிதத்தில் கூறியுள்ளனர் யூத குருக்களும் வல்லுனர்களும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 February 2024, 15:05