தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  (ANSA)

இந்திய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்கள் நியமனம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசாகப்பட்டினம், அவுரங்காபாத், மற்றும் இந்தோர் மறைமாவட்ட ஆயர்களின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இந்தியாவின் பூர்னியா ( Purnea), நல்கோந்தா, (Nalgonda) காந்த்வா (Khandwa), கம்மம் (Khammam) ஆகிய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்களை நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிப்ரவரி 17 சனிக்கிழமை வெளியிடப்பட்ட தகவல்களின்படி பூர்னியா ( Purnea), நல்கோந்தா, (Nalgonda) காந்த்வா (Khandwa), கம்மம் (Khammam) ஆகிய மறைமாவட்டங்களுக்குப் புதிய ஆயர்களை நியமித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விசாகப்பட்டினம், அவுரங்காபாத், மற்றும் இந்தோர் மறைமாவட்ட ஆயர்களின் இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.

அருள்பணி. பிரான்சிஸ் டிர்கெ

வடஇந்தியாவின் பூர்னியா மறைமாவட்டத்தின் சமூகப்பணி நிலைய இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்பணியாளர் பிரான்சிஸ் டிர்கெ (Francis Tirkey) அவர்களை, பூர்ணியா மறைமாவட்டத்திற்கான புதிய ஆயராக நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1961ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் நாள் கொலோடியாவில் பிறந்த அருள்பணியாளர் பிரான்சிஸ் திர்கே அவர்கள், தத்துவயியலை ராஞ்சியில் உள்ள தூய ஆல்பர்ட் கல்லூரியிலும், இறையியலை மங்களூரில் உள்ள தூய யோசேப்பு மறைமாவட்டக் கல்லூரியிலும், சமூகப்பணிக்கான பட்டயப்படிப்பை கனடாவில் உள்ள ஹலிபெஃக்ஸ் ஹோடி பன்னாட்டு நிறுவனத்திலும் பயின்றவர்.

1993 மே 17 அன்று தும்கா மறைமாவட்ட அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், Tinpahar பங்கின் துணைப்பங்குத்தந்தை, தும்கா சமூகப்பணி நிலையத்தின் நிர்வாகி, பூர்ணியா சமூகப்பணி நிலையத்தின் இயக்குனர் மற்றும் நிர்வாகி, பட்டியல் மற்றும் பழங்குடியின மக்களுக்கான தொழிலாளர் ஆணையத்தின் தலைவர் என பல பொறுப்புக்களை ஆற்றியுள்ளார்.

அருள்பணி. கர்ணம் தமான் குமார்

நல்கோந்தா ஆயராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி கர்ணம் தமான் குமார் (Karnam Dhaman Kumar, M.S.F.S.) அவர்கள் 1963ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள். ஆந்திரா மாநிலத்தின் விசாகப்பட்டினம் உயர்மறைமாவட்டத்தில் உள்ள விஜயநகரத்தில் பிறந்தவர். தூய பிரான்சிஸ் தேசேல்ஸ் மறைப்பணியாளர்கள் சபையைச் சார்ந்த இவர், தத்துவயியலை பெங்களூரு சுவித்யா கல்லூரியிலும், இறையியலை புனேயில் உள்ள ஞான தீப வித்யாபத்திலும் பயின்றவர்.  

துணைப்பங்குத்தந்தை, குருமட அதிபர், நிர்வாகி, பிரான்சிஸ் தே சேல்ஸ் மறைப்பணியாளர்கள் சபையின் மறைமாநில ஆலோசகர், கல்லூரி முதல்வர் என பல பொறுப்புக்களை ஆற்றியவர்.

அருள்பணி. Augustine Madathikunnel  

காந்த்வா மறைமாவட்ட ஆயராக அதே மறைமாவட்டத்தை சார்ந்த அருள்பணி Augustine Madathikunnel  அவர்கள், 1963ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் நாள் கேரளா மாநிலத்தின் Koolivaya என்னும் இடத்தில் பிறந்தவர்.  நாக்பூரில் உள்ள தூய சார்லஸ் குருமடத்தில் தத்துவயியல் மற்றும் இறையியலை பயின்ற இவர் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று காந்த்வா மறைமாவட்ட அருள்பணியாளராக திருப்பொழிவுபெற்றார்.  

2021 ஆம் ஆண்டு முதல் காந்த்வா மறைமாவட்ட ஆயர் நிர்வாகியாகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் இவர் துணைப்பங்குத்தந்தை, பங்குத்தந்தை ஆயர் செயலர் என பல பணிகளைச் செய்தவர்.

அருள்பணி. Prakash Sagili

ஹம்மாம் மறைமாவட்ட ஆயராக திருத்தந்தை அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள Cuddapah மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்பணி Prakash Sagili அவர்கள், 1957ஆம் ஆண்டு ஜனவரி 2 அன்று பிறந்தவர். தற்போது CCBI எனப்படும் இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நலவாழ்வு ஒருங்கிணைப்பாளராக (Coordinator of the CCBI Health Apostolate) பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2024, 14:37