தேடுதல்

முர்சியாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகப்  பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் முர்சியாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (Vatican Media)

நீங்கள் திருஅவையின் இதயத்திலிருந்து பணியாற்றுகிறீர்கள்!

கிறிஸ்துவின் அங்கத்தினராக நமது தாயாகிய இந்தத் திருஅவையில், கிறிஸ்தவர் செய்யும் அனைத்திலும், மறைப்பணியாளராக, நற்செய்தி அறிவிப்பாளராக இருக்க வேண்டும் : திருத்தந்தை பிரான்சிஸ்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உங்கள் வாழ்க்கையை அணுகும் ஒவ்வொரு நபருக்கும் இயேசு கிறிஸ்துவைக் கொண்டு வர, கடவுளை ஏற்றுக்கொள்ளும் மற்றும் அவருக்கு எந்தத் துறையிலும் சான்றுபகரும் திறன் கொண்ட மக்களை உருவாக்க, ஒரு சகோதர சமுதாயத்தை உருவாக்க, நீங்கள் திருஅவையின் இதயத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள் என்று கூறினார் திருத்தந்தை.

ஜனவரி 4, இவ்வியாழனன்று, முர்சியாவின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டதன் 25-ஆம் ஆண்டை முன்னிட்டு, அதன் பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை. 

இப்பல்கலைக் கழகத்தின் நிறுவனர் அருள்பணியாளர் ஜோஸ் லூயிஸ் மெண்டோசா பெரெஸ் குறித்து, உங்களின் ஆயர், அவர் ஒரு சகோதரர், ஒரு நம்பிக்கையாளர், கடவுளின் அன்பின் சாட்சி, நன்மை செய்வதன் வழியாக, வாழ்வைக் கடந்து செல்ல விரும்பியவர்' என்று விவரித்தார் என்று எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.   

மேலும் இந்த அழகான வார்த்தைகள், நாம் யாருமே முழுமைபெற்றவர்கள் அல்ல, ஆனால் அன்பு செலுத்தும் திறன் கொண்டவர்கள் என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்றும் கூறிய திருத்தந்தை,  இதனை நினைவில்கொள்ளும்போது, நாம் கடவுளுக்கும் அவருடைய இரக்கத்திற்கும் நெருக்கமாகிறோம் என்றும் உரைத்தார்.

திருஅவையின் இதயத்திலிருந்து பிறந்து, கடவுளின் அன்பின் வலிமையால் உயிரூட்டப்பட்ட  அருள்பணியாளர் பெரெஸ் அவர்கள், மறைப்பணி, நற்செய்தி அறிவிப்பு மற்றும் ஆழமான இருத்தலியல் வழியில் பல்கலைக்கழகத்தை தனது மரபுவழியாக விட்டுச்செல்ல விரும்பினார் என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.

கிறிஸ்துவின் அங்கத்தினராக நமது தாயாகிய இந்தத் திருஅவையில், கிறிஸ்தவர் செய்யும் அனைத்திலும், மறைப்பணியாளராக,  நற்செய்தி அறிவிப்பாளராக இருக்க வேண்டும் என்றும், மேலும் துல்லியமாக இந்தக் காரணத்திற்காக, மனித எதார்த்தத்துடன், மனிதரின் ஆழமான கேள்விகளுடன் ஆழமான இருத்தலியலில் நெருக்கமாக இணைக்கப்பட வேண்டும் என்றும் விவரித்தார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 January 2024, 16:20